படம் | AP
டி20 உலகக் கோப்பை

அன்றும் சரியாக உறங்கவில்லை, இன்றும் சரியாக உறங்க முடியாது; ஆஸி.க்கு எதிரான வெற்றி குறித்து ரஷித் கான்!

அன்று மும்பையில் சரியாக உறங்க முடியவில்லை, இன்று மேற்கிந்தியத் தீவுகளில் சரியாக உறங்க முடியாது.

DIN

அன்று மும்பையில் சரியாக உறங்க முடியவில்லை, இன்று மேற்கிந்தியத் தீவுகளில் சரியாக உறங்க முடியாது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடைபெற்ற 50 உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கிளன் மேக்ஸ்வெல்லின் அசத்தலான இரட்டை சதத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது, கிளன் மேக்ஸ்வெல் அதிரடியான ஆட்டத்தால் அணியை தோல்வியிலிருந்து மீட்டார்.

ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அசத்தியுள்ளது.

இந்த நிலையில், அன்று மும்பையில் சரியாக உறங்க முடியவில்லை, இன்று மேற்கிந்தியத் தீவுகளில் சரியாக உறங்க முடியாது என ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இனி என்னால் நன்றாக உறங்க முடியும் என நினைக்கிறேன். ஆனால், கடந்த ஆண்டு உலகக் கோப்பையின்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஏற்பட்ட தோல்வி என்னை உறங்கவிடவில்லை. அந்த ஆட்டம் என் மனதுக்குள் அடிக்கடி தோன்றியது. அந்த நாள் முழு இரவும் நான் உறங்கவே இல்லை. அதேபோல இன்று இரவும் என்னால் உறங்க முடியாது என நினைக்கிறேன். ஆனால், இன்று மகிழ்ச்சியால் உறக்கம் வராது என நினைக்கிறேன் என்றார்.

அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் ஆப்கானிஸ்தான் தனது கடைசி சூப்பர் 8 சுற்றுக்கானப் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT