படம் | AP
டி20 உலகக் கோப்பை

இந்தியாவுக்கு எதிரான சவாலுக்கு ஆஸி. தயாராக இல்லை: முன்னாள் ஆஸி. வீரர்

இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா அணி அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு ஆஸ்திரேலிய அணி தயாராக இருக்கவில்லை என நினைக்கிறேன். மிட்செல் ஸ்டார்க் சிறப்பாக பந்துவீசவில்லை. பந்து ஸ்விங் ஆகவில்லையென்றால், அதற்கேற்றவாறு மிட்செல் ஸ்டார்க் பந்துவீச வேண்டும். ஆனால், அவர் அவ்வாறு செய்யாததால் ரோஹித் சர்மா அவரது ஓவரில் 29 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கிலும் சொதப்பியதால், தோல்வியடைந்தது. ஹார்திக் பாண்டியா கொடுத்த எளிய கேட்ச்சை மிட்செல் மார்ஷ் தவறவிட்டார். அதன்பின், ஹார்திக் 22 ரன்கள் எடுத்தார். அந்த ரன்கள் மிகவும் முக்கியமானவை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT