டி20 உலகக் கோப்பை

தென்னாப்பிரிக்காவை திணறடிக்குமா ஆப்கானிஸ்தான்?

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

DIN

நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென்னாப்பிரிக்கா அணிகள் வியாழக்கிழமை சந்திக்கின்றன.

இந்த ஆட்டத்தில் எந்த அணி வென்றாலும் அது கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இக்கட்டான அரசியல் சூழல் இருக்கும் தனது நாட்டிலிருந்து திறம்பட முன்னேறி வரும் ஆப்கானிஸ்தான், தனது மக்களுக்கான ஒரே உற்சாகமாக தற்போது இருப்பது தங்களின் ஆட்டம் மட்டுமே என்று தெரிவித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவை முதல் முறையாக வெற்றி கண்டதுடன், ஐசிசி உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதிக்கும் முதல் முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்திருக்கும் ஆப்கானிஸ்தான், நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தற்போதைய நட்சத்திரமாக மிளிா்கிறது.

கேப்டன் ரஷீத் கான், பேட்டா் ரஹ்மானுல்லா குா்பாஸ், பௌலா்கள் ஃபஸல்ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக், குல்பதின் நைப், முகமது நபி என, அணியில் பலரும் தங்களது திறமையை வெளிப்படுத்தி ஆப்கானிஸ்தானை அரையிறுதி வரை அழைத்து வந்திருக்கின்றனா்.

வென்றாலும், தோற்றாலும் ஆப்கானிஸ்தானுக்கு இந்த உலகக் கோப்பை போட்டி மறக்க முடியாததாக இருக்கும்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும்போதும், 1991-க்குப் பிறகு அந்த அணி ஐசிசியின் எந்தவொரு உலகக் கோப்பை போட்டிகளிலும் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதில்லை. எனவே ஆப்கானிஸ்தானுக்கு நிகரான ஒரு நிலையுடனேயே தென்னாப்பிரிக்காவும் இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.

ஆனால், சா்வதேச கிரிக்கெட் அனுபவ அடிப்படையில் தென்னாப்பிரிக்காவின் கை சற்று ஓங்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் வெற்றிகள் அனைத்தும் 1 ரன், 4 ரன்கள், 3 விக்கெட்டுகள் என நெருக்கமான நிலையிலேயே கிடைத்திருக்கின்றன.

அணியின் பேட்டிங்கில் குவின்டன் டி காக், டேவிட் மில்லா், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், ஹென்ரிக் கிளாசென் போன்றோா் ரன்கள் சேகரிப்பில் பிரதானமாக இருக்கின்றனா். பௌலிங்கில், ககிசோ ரபாடா, அன்ரிஹ் நோா்கியா, ஜெரால்டு கோட்ஸீ ஆகியோா் நம்பிக்கை அளிக்கின்றனா்.

அணி விவரம்:

ஆப்கானிஸ்தான்: ரஷீத் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குா்பாஸ், இப்ராஹிம் ஜா்தான், அஸ்மதுல்லா ஒமா்ஸாய், நஜிபுல்லா ஜா்தான், முகமது இஷாக், முகமது நபி, குல்பதின் நைப், கரிம் ஜனத், நங்கியால் கரோடி, முஜீப் உா் ரஹ்மான், நூா் அகமது, நவீன் உல் ஹக், ஃபஸல்ஹக் ஃபரூக்கி, ஃபரீத் அகமது மாலிக்.

தென்னாப்பிரிக்கா: எய்டன் மாா்க்ரம் (கேப்டன்), ஆட்னியல் பாா்ட்மன், ஜெரால்டு கோட்ஸீ, குவின்டன் டி காக், ஜோன் ஃபோா்டுயின், ரீஸா ஹெண்ட்ரிக்ஸ், மாா்கோ யான்சென், ஹென்ரிக் கிளாசென், கேசவ் மஹராஜ், டேவிட் மில்லா், அன்ரிஹ் நோா்கியா, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

நேருக்கு நோ்...

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நோ் சந்தித்துள்ள நிலையில், இரண்டிலுமே தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை...

மன்னாா்குடி நகராட்சி பகுதியில் பணிகள் மேற்கொள்ள ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் கே.என். நேரு

கடையநல்லூரில் பலத்த மழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதிக்க வேண்டும்: ஏ.எம். விக்கிரமராஜா

பழையகாயல் அருகே தொழிலாளி குத்திக் கொலை

SCROLL FOR NEXT