இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் 2-வது முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத்தொகையாக பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஐசிசியின் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத் தொகையாக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணி மிகவும் உறுதியுடன் சிறப்பாக செயல்பட்டது. இந்த மகத்தான வெற்றிக்கு காரணமான இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவிப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.