தமிழ்நாடு

6-ம் வகுப்பு "கணினி கல்வி' பாடத் திட்டம் தயார்!

சென்னை, ஜூலை 24: இந்த ஆண்டில் 6-ம் வகுப்பில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாடத் திட்ட தயாரிப்புப் பணி முடிவடைந்துவிட்டது.   அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், சுமார் 6 லட்சம் புத்தகங்களை

ஆர். ஆதித்தன்

சென்னை, ஜூலை 24: இந்த ஆண்டில் 6-ம் வகுப்பில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பாடத் திட்ட தயாரிப்புப் பணி முடிவடைந்துவிட்டது.

  அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், சுமார் 6 லட்சம் புத்தகங்களை அச்சடித்து தர பள்ளிக் கல்வித் துறை காத்திருக்கிறது.

  நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதன்முறையாக மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2-வில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. இதை மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.

  அந்த வகையில் மற்ற மாநிலங்களில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  இதைத் தொடர்ந்து தமிழக அரசும், இந்தக் கல்வியாண்டில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.

    "முதல் கட்டமாக இந்த ஆண்டில் 6-ம் வகுப்பில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர் அடுத்த ஆண்டில் 7-ம் வகுப்பில் கணினி கல்வி அறிமுகப்படுத்தப்படும்' என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  புத்தகங்களை விரைந்து தர வேண்டும்: "இந்தக் கல்வியாண்டில் 6-ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், கணினி கல்வி தொடர்பான புத்தகங்கள் மாணவருக்கு வழங்கப்படவில்லை. புத்தகம் அச்சடித்து விநியோகிக்க கால தாமதமாகும் என்று தெரிகிறது. மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் புத்தகங்களை விரைந்து அச்சடித்து தர வேண்டும்' என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுபற்றி பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது "கணினி கல்வி தொடர்பான பாடத் திட்டத்தை தயாரிக்க கம்ப்யூட்டர் வல்லுநர்கள், தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களின் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி என்ன மாதிரியான பாடங்களை பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வு செய்தது. இதில் தனியார் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வரும் கணினி கல்வி பாடத் திட்டமும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பாடத் திட்டம் தயாரிப்புப் பணி முழுமை அடைந்துவிட்டது' என்று தெரிவித்தனர்.

  பாடத் திட்டத்தில் என்னென்ன இடம் பெறுகிறது? "பாடத் திட்டத்தில் அடிப்படை கணினி கல்வி அறிமுகம், எம்.எஸ். வேர்ட், எக்ஸ்எல், சாஃப்ட்வேர்- ஹார்ட்வேரின் பயன்கள், கணினி பாகங்கள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன' என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT