முகப்பு
தமிழ்நாடு

சுயநிதி அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். கட்டணம் ரூ.82,000

சென்னை, ஜூலை 29: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டு (2009-10) கட்டணம் ரூ.82,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.   இதே போன்று இந்தி

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:57 PM
பகிர்:

சென்னை, ஜூலை 29: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். இடங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டு (2009-10) கட்டணம் ரூ.82,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

  இதே போன்று இந்திய மருத்துவ முறையில் சுயநிதி கல்லூரிகளில் உள்ள ஹோமியோபதி மருத்துவ பட்டப்படிப்புக்கு (பி.எச்.எம்.எஸ்.) இடங்களுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.33,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

  இந்தக் கட்டணங்களை ஓய்வுபெற்ற நீதிபதி என்.வி. பாலசுப்பிரமணியன் குழு நிர்ணயித்துள்ளது.

  சுயநிதி பி.டி.எஸ். படிப்பைப் பொருத்தவரை கடந்த ஆண்டு கட்டணம் ரூ.75,000-த்திலிருந்து ரூ.82,000-மாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  சுயநிதி ஹோமியோபதி பட்டப்படிப்பை (பி.எச்.எம்.எஸ்.) பொருத்தவரை கடந்த ஆண்டு கட்டணம் ரூ.30,000-த்திலிருந்து ரூ.33,000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு படிப்புகளுக்கான கட்டணத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  மாற்றமில்லை: சுயநிதி சித்த மருத்துவப் படிப்பு (பி.எஸ்.எம்.எஸ்.), சுயநிதி ஆயுர்வேத மருத்துவப் படிப்பு (பி.ஏ.எம்.எஸ்.) - ரூ.30,000; சுயநிதி பி.எஸ்ஸி. (நர்சிங்) - ரூ.30,000; சுயநிதி பி.ஃபார்ம், பி.பி.டி. - ரூ.28,000; சுயநிதி எம்.எஸ்ஸி. (நர்சிங்) - ரூ.50,000; சுயநிதி எம்.ஃபார்ம்., எம்.பி.டி. - ரூ.45,000 என கடந்த கல்வி ஆண்டில் (2008-09) நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

  நடப்புக் கல்வி ஆண்டுக்கும் (2009-10) இதே கட்டணம் தொடரும். நிர்வாகத் தரப்பு இடங்களுக்கும் இதே கட்டணத்தைத்தான் சுயநிதிக் கல்லூரிகள் வாங்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  பி.டி.எஸ்.: சென்னை பாரிமுனையில் மட்டும் அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 17 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 900 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். (பல் மருத்துவப் படிப்பு) இடங்கள் உள்ளன.

  முதல் கட்ட கவுன்சலிங்கின்போது (ஜூலை 6 முதல் ஜூலை 17) சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில், 50 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ.82,000 செலுத்த வேண்டும்.

  இந்திய மருத்துவ முறை படிப்புகளுக்கு இப்போது விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருவதால், ஹோமியோபதி உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஆகஸ்ட் மூன்றாவது வாரம் கவுன்சலிங் நடைபெற உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →