அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 350 ஊழியர்களுக்கு பணப் பயன்கள் கிடைப்பதில் தாமதம்
சென்னை, ஏப்ரல் 1: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 350 ஊழியர்களுக்கு பணப் பயன்கள் (கம்ப்யூட்டேஷன் தொகை) வழங்குவதில் தாமதம் தொடர்கிறது. பணியில் இருந்து ஓய்வு பெற்று 2 ஆண்டுகள
சென்னை, ஏப்ரல் 1: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற 350 ஊழியர்களுக்கு பணப் பயன்கள் (கம்ப்யூட்டேஷன் தொகை) வழங்குவதில் தாமதம் தொடர்கிறது.
பணியில் இருந்து ஓய்வு பெற்று 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதே நிலை தொடர்வதால் ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 1.4.2003}க்குப் பின் பணியில் சேரும் எந்த ஊழியருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது என மத்திய அரசு உத்தரவிட்டது.
எனினும் தமிழகத்தில் கடந்த 31.3.2003 நிலவரப்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் இப்போது பணியில் உள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்கள் உள்ளிட்ட சுமார் 1 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டது.
இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ. 2,232 கோடி மொத்த நிதியுடன் தனி அறக்கட்டளை இயங்கி வருகிறது. எனினும், இந்த நிதியை பயன்படுத்தி, வரும் 2020}ம் ஆண்டு வரை மட்டுமே ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, வருங்காலத்தில் ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியப் பயன்களைப் பெற முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஓய்வூதியர்களுக்கு பணப் பயன் கிடைப்பதில் சிக்கல்: இந்த நிலையில், 2009}10 நிதியாண்டின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமை ( மார்ச் 31) ஒரே நாளில் மட்டும் அரசு விரைவு பஸ் கழகத்தின் 31 ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.
இவர்கள் உள்பட ஏற்கெனவே ஓய்வு பெற்ற 350}க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இதுவரை வருங்கால வைப்பு நிதி, சரண்டர் ஈட்டிய விடுப்பு (இ.எல்.) நிலுவைத் தொகை, சமூக பாதுகாப்பு திட்ட நிதியுதவி உள்ளிட்ட பணப் பயன்கள் கடந்த 2008}ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குப் பின்னர் வழங்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
நிதிநிலை காரணமாக, ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தலா ரூ. 7,500 வரையிலான இந்தப் பணப் பயன்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நிதிநிலை சீரடைந்த பின் இந்தத் தொகை வழங்கப்படும் என்று போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூறுவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இவர்களின் குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
விதிகளை மீறி நிலுவைத் தொகை: 6}வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, 1.1.2007 முதல் 31.1.2012}க்குள், ஊழியர்கள் தங்களுக்கான நிலுவைத் தொகையை 3 தவணைகளாகப் பெறலாம் என்று அரசாணை 250}ன் படி ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஊழியர்கள் யாருக்கும் இந்த நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை.
ஆனால், செவ்வாய்க்கிழமை பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னதாகவே, அரசு விரைவு பஸ் கழக நிர்வாக அதிகாரி ஒருவருக்கு மட்டும் அரசாணையை மீறி இந்த நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.