முகப்பு
தமிழ்நாடு

அதிக மகசூலுக்கு வேப்பங்கொட்டை கரைசல்

சிதம்பரம், ஏப்.14: தமிழக கிராமங்களில் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தித் திறனை பெற்றுத் தரும் இயற்கை வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விவசாயிகளின் வயல்கள்

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:31 PM
பகிர்:

சிதம்பரம், ஏப்.14: தமிழக கிராமங்களில் குறைந்த செலவில் அதிகளவு உற்பத்தித் திறனை பெற்றுத் தரும் இயற்கை வேளாண்மை பாதுகாப்பு நடவடிக்கைகள் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விவசாயிகளின் வயல்கள் மற்றும் தோட்டங்களில் கிடைக்கும் இயற்கை விளை பொருள்களை கொண்டு எளிய வேளாண் தொழில்நுட்பங்களை கொண்டு தயார் செய்யப்படும், பயிர்களை பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வேப்பங்கொட்டை கரைசல் குறித்து விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

தயாரிக்கும் முறை: விவசாயிகள் 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்றாக தூளாக்கி, இருபது லிட்டர் தண்ணீரில் கரைத்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின்னர் இதை நன்றாக வடிகட்டி 200 லிட்டர் நீருடன் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கும் போது 100 கிராம் காதி சோப்பை நன்றாக கலக்க வேண்டும். காதிசோப் கரைசல் பயிர்களின் மீது ஒட்டுவதற்காக உதவும். பின்னர் கைத்தெளிப்பான் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 முதல் 12 டேங்க் வரை தேவைப்படும்.

இவ்வாறு வேப்பங்கொட்டை கரைசல் தெளிப்பதன் வாயிலாக கம்பளிப் புழு, அஸ்வினி, தத்துப்பூச்சி, புகையான், இலை சுருட்டுப் புழு, ஆனைக்கொம்பன், கதிர்நாவாய் பூச்சி ஆகியவை கட்டபடுகின்றன. மேலும் சாம்பல் நோய், மஞ்சள் வைரஸ் நோய் போன்றவை எளிதாக கட்டுப்படுத்தப்படுகிறது.

எனவே தமிழக விவசாயிகள், பண்ணை மகளிர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் குறைந்த செலவில், குறைந்த காலத்தில் எளிய வேளாண் தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்படும் வேப்பங்கொட்டை கரைசல் மூலம் எளிதான முறையில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து அதிக லாபமும், மகசூலும் பெறலாம் என அண்ணாமலைப் பல்கலை. வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.