முகப்பு
தமிழ்நாடு

3 ஆண்டுக்கு முன்பு காணாமல் போய் கிடைத்த மகனை மீட்க பாசப் போராட்டம் நடத்தும் தாய்!

திருவொற்றியூர், ஆக. 15: கோயில் விழாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் மீண்டும் கிடைத்த மன நலம் பாதித்த மகன் மணிகண்டனை (19) மீட்க அவரது தாய் கலைச்செல்வி பாசப் போராட்டம் நடத்தி வருகிறார்.  மன நலம்

தமிழ்நாடு

3 ஆண்டுக்கு முன்பு காணாமல் போய் கிடைத்த மகனை மீட்க பாசப் போராட்டம் நடத்தும் தாய்!

திருவொற்றியூர், ஆக. 15: கோயில் விழாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் மீண்டும் கிடைத்த மன நலம் பாதித்த மகன் மணிகண்டனை (19) மீட்க அவரது தாய் கலைச்செல்வி பாசப் போராட்டம் நடத்தி வருகிறார்.  மன நலம்

Updated On : 27 டிசம்பர், 2023 at 5:07 PM
பகிர்:

திருவொற்றியூர், ஆக. 15: கோயில் விழாவில் 3 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் மீண்டும் கிடைத்த மன நலம் பாதித்த மகன் மணிகண்டனை (19) மீட்க அவரது தாய் கலைச்செல்வி பாசப் போராட்டம் நடத்தி வருகிறார்.

 மன நலம் குன்றிய மணிகண்டனை மீட்பதில் சட்ட ரீதியான சிக்கல்கள் உள்ளதால், அவரை எப்படியாவது மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலைச்செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்த விவரம்:

 எண்ணூர் காசிகோயில் குப்பம் 2-வது தெருவில் வசிப்பவர் கலைச்செல்வி (40). இவரது கணவர் கனகராஜ், உணவுப் பொருள் வழங்கல் துறையில் வேலை பார்த்து வந்த நிலையில் காசநோய் தாக்கி கடந்த 2007-ல் இறந்துவிட்டார்.  இவர்களுக்கு பெண், இரண்டு மகன்கள் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த பெண் இறந்துவிட்டார். இரண்டாவது மகன்தான் மணிகண்டன்.

 மன நலம் குன்றி பிறந்த மணிகண்டனை, மணலி அருகே நாப்பாளையத்தில் உள்ள சிறப்புப் பள்ளியில் சேர்த்தார் கலைச்செல்வி. 16 வயது கடந்த நிலையில் கடந்த 2007 டிசம்பர் 11-ம் தேதி அன்னை சிவகாமி நகரில் நடைபெற்ற திருவிழாவிற்கு மணிகண்டனை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, திடீரென மணிகண்டன் காணாமல் போனார்.  இதுபற்றி, எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு....

  இந்நிலையில் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் மார்க்கெட் பகுதியில் மணிகண்டன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்ததை பார்த்ததாக உறவினர் ஒருவர் அண்மையில் கலைச்செல்வியிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த கலைச்செல்வி தனது தந்தை, தாயாரை அழைத்துக் கொண்டு ஜாம்பஜார் சென்றார். அங்கு மணிகண்டன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். தன் மகன் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை நேரில் பார்த்து கண்கலங்கிய கலைச்செல்வி, மணிகண்டன் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். உடனே திரும்பிப் பார்த்த மணிகண்டன், கலைச்செல்வியிடம் வந்துள்ளார்.

 அதைத்தொடர்ந்து, ஆட்டோவில் மணிகண்டனை அழைத்துக் கொண்டு எண்ணூர் திரும்பியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காணாமல் போன மகன் கிடைத்த மகிழ்ச்சி கலைச்செல்விக்கு ஓரிரு நாள்கள் கூட நீடிக்கவில்லை.

 நடந்தது என்ன?

 கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி என் மகனை வீட்டிற்கு அழைத்து வந்தோம். ஏற்கெனவே காணாமல் போனதாக புகார் அளித்திருந்ததால் மணிகண்டன் கிடைத்துவிட்ட தகவலை தெரிவிக்க மறுநாள் எண்ணூர் காவல் நிலையத்திற்குச் சென்றோம்.

 அப்போது திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த கற்பகம் என்ற பெண் காவல் நிலையத்தில் இருந்தார். மணிகண்டன் தங்களது மகன் என்றும், தன்னிடம் அவனை ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸôரிடம் தெரிவித்தார். மேலும் அவன் மணிகண்டனே அல்ல, அவன் பெயர் குமாரவேல், கற்பகத்தின் ஒன்பதாவது மகன் என்று வாதிட்டனர். இதில் வேடிக்கை என்னவெனில் கற்பகத்தின் வயது தற்போது 75.  நாங்கள் மணிகண்டனின் பிறப்புச் சான்றிதழ், சிறப்பு பள்ளியில் படித்ததற்கான சான்று, குடும்ப அட்டையில் மணிகண்டனின் பெயர், மாற்றுத் திறனாளிகள் துறையின் பதிவு அட்டை, புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை போலீஸôரிடம் கொடுத்தோம். மேலும் மனநலம் குன்றிய நிலையில் உள்ள மணிகண்டனால் யார் தனது பெற்றோர் என்பதை உறுதியாகத் தெரிவிக்க இயலவில்லை.

 இது குறித்து விசாரித்த போலீஸôர், மணிகண்டனை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர் என்றார்.

நீதிமன்றமே தீர்வு காண வேண்டும்:

 இதுகுறித்து, எண்ணூர் போலீஸ் உதவி ஆணையர் பால்ராஜ் கூறியது:

கலைச்செல்வி தரப்பில் தெரிவித்த சான்றுகளில் உண்மைத் தன்மை இருப்பினும் அதனையே இறுதியாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கற்பகம் தரப்பிலும் சில சான்றுகள் அளிக்கப்பட்டன.

 மனநலம் குன்றிய நிலையில் உள்ள மணிகண்டனால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள இயலவில்லை. எனவேதான் மரபணு சோதனை மேற்கொள்ள வசதியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்.

 ஆனால் மனநலம் குன்றியவர்கள் குறித்து மருத்துவ ஆய்வுகள் மேற்கொள்வதில் சில சட்ட ரீதியான சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்த நீதிபதி, சிறுவனை முதலில் மனநல  காப்பகத்தில் வைத்து பராமரிக்கும்படி உத்தரவிட்டார்.  மனநல மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளோம். இனி நீதிமன்றம்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றார் பால்ராஜ். கோயில் விழாவில் காணாமல் போய் 3 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த தனது மகனை, சட்ட ரீதியாக மீட்பேன் என்கிறார் கலைச்செல்வி.

முழு கட்டுரையைப் படிக்க →