தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்டது ஈஎஸ்ஐ மருத்துவமனை திட்டம்: 10 கோடி ஒதுக்கீடு செய்தும் பலனில்லை

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க |10 கோடி நிதி ஒதுக்கி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்குத் தேவையான நிலம் ஒதுக்கித்தர மாநில அரசு

என். தமிழ்ச்செல்வன்

திருப்பூர்: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் மாவட்டத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க |10 கோடி நிதி ஒதுக்கி 8 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதற்குத் தேவையான நிலம் ஒதுக்கித்தர மாநில அரசு தொடர்ந்து காலதாமதம் செய்துவருவதாகத் தெரிகிறது.

 இதனால், நோய்வாய்ப்பட்ட திருப்பூர் தொழிலாளர்கள் ஈஎஸ்ஐ திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற கோவைக்கு அலைய வேண்டிய நிலை தொடர்கிறது.

 மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தொழிலாளர் ஈட்டுறுதிக் கழக (ஈஎஸ்ஐ) திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு பல்வேறு மருத்துவம் மற்றும் பணப்பயன்கள் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இணையும் தொழிலாளர்களின் தினசரி ஊதியம் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் தொழிலாளர் சார்பில் |1.75ம், அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நிறுவனங்களின் சார்பில் |4.75ம் ஈஎஸ்ஐ கழகத்துக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம் ஈஎஸ்ஐ மருத்துவமனைகளில் தொழிலாளர்கள் பல்வேறு சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

 அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈஎஸ்ஐ திட்டத்தில் பயனாளிகளாக இணைக்கப்பட்டுள்ளனர். அத்தொழிலாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சார்பில் மாதந்தோறும் சுமார் |2 கோடி ஈஎஸ்ஐ திட்டத்துக்காக செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருப்பூர் தொழிலாளர்கள் மூலம் ஈஎஸ்ஐ கழகத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைத்த போதும் திட்டப்பயனான மருத்துவ சிகிச்சை பெற இம்மாவட்டத் தொழிலாளர்கள் கோவை சிங்காநல்லூர் ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கே செல்ல வேண்டியுள்ளது.

கிடப்பில் போடப்பட்ட திட்டம்...

இதனால், பல தொழிலாளர்கள் ஈஎஸ்ஐ திட்டத்துக்கு வீணாக பணத்தை செலுத்திவிட்டு தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சைப் பெறும் அவலநிலை தொடர்கிறது. தொழிலாளர்களின் இப் பாதிப்பை அடுத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க கடந்த 2003ம் ஆண்டில் அக்கழகம் |10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தவிர, அம்மருத்துவமனை கட்டுவதற்கு திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் நிலம் ஒதுக்கித்தர மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதுவரை மாநில அரசு ஈஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவதற்குத் தேவையான இடத்தை ஒதுக்கித் தராததால் அத்திட்டம் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது.

  திருப்பூரில் ஈஎஸ்ஐ மருத்துவமனை விரைவில் அமையும் பட்சத்தில் கோடிக்கணக்கில் பணம் செலுத்தும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் இலவச சிகிச்சைகளைப் பெற முடியும். இனியும் காலம் தாழ்த்தாமல் மாநில அரசு தான் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT