தமிழ்நாடு

2005-ம் ஆண்டுக்குப் பிறகு நிரம்பிய அணைகள்

சென்னை, டிச. 8: தமிழகத்தில் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது முதல்முறையாக முக்கிய அணைகள், ஏரிகள் நிரம்பியுள்ளன. தமிழகத்தில் பொதுப் பணித்துறையின் கீழ் உள்ள மேட்டூர், பெருஞ்சாணி, சாத்தனூர், பெரியாறு,

ஆர். ஆதித்தன்

சென்னை, டிச. 8: தமிழகத்தில் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு, இப்போது முதல்முறையாக முக்கிய அணைகள், ஏரிகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தில் பொதுப் பணித்துறையின் கீழ் உள்ள மேட்டூர், பெருஞ்சாணி, சாத்தனூர், பெரியாறு, ஆழியாறு உள்ளிட்ட முக்கிய அணைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

இந்த ஆண்டில் தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை பரவலாக பெய்துள்ளது. இதனால் பொதுப்பணித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அணைகளில் கணிசமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டில் தமிழகத்தில் கன மழை பெய்த சமயத்தில் முக்கிய அணைகள், ஏரிகள் நிரம்பி இருப்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அணைகள், ஏரிகள்நிரம்பியுள்ளன. இதில் பொதுப் பணித்துறையின் கீழ் வரும் மேட்டூர் 120 அடி, வைகை 71, பெருஞ்சாணி 77, கிருஷ்ணகிரி 52, சாத்தனூர் 119, ஆழியாறு 120 ஆகிய முக்கிய அணைகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. இதர அணைகளின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்து வருகிறது.

நிரம்பாத அணைகள்:

தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்த நிலையில், பொதுப்பணித்துறையின் கீழ் வரும் 6 அணைகளின் நீர்மட்டம் பாதாளத்திலேயே உள்ளது ஆச்சர்யம் தருகிறது. மழை மறைவு பிரதேசமாக உள்ளதால், இந்த அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லை என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எந்தெந்த அணைகள்?

தருமபுரி மாவட்டத்தில் தும்பலஹள்ளி அணையின் மொத்த கொள்ளவு14.75 அடி ஆகும். ஆனால் நீர் இருப்பு 1.05 அடியாக உள்ளது. ஆனல் அதே மாவட்டத்தில் உள்ள சின்னாறு (24.6 அடி), நாகவதி அணை (50 அடி) முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

வேலூர் மோர்தானா அணையின் மொத்த அடி 37.73 ஆகும். இப்போது அணையின் நீர்மட்டம் 13.12 அடியாக உள்ளது. மதுரை மண்டலத்தில் விருதுநகர் மாவட்டம் வேம்பக்கோட்டை நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 22.97 அடியாகும். ஆனால் வெறும் 2.95 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. கன்னியாகுமரியில் உள்ள பொய்கையாறு நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 42.65 அடியாகும். இதில் 9.2 அடிமட்டுமே நீர் இருப்பு உள்ளது.

திருச்சி மண்டலத்தில் உள்ள 10.82 அடி கொள்ளளவு கொண்ட உப்பாறு அணையில் ஒரு அடி நீர் கூட இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

கோவை மண்டலத்தில் உள்ள 24.6 அடி கொண்ட வட்டமலை காரையோடை அணையில் இப்போது வெறும் 5.74 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

9 ஆயிரம் ஏரிகள் நிரம்பின:

இதுதவிர பொதுப் பணித்துறையின் கீழ் வரும் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. மொத்தமுள்ள 13,702 ஏரிகளில் சுமார் 9,661 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பி வழிகின்றன.

சென்னை மண்டலத்தில் உள்ள 3,990 ஏரிகளில் 2,344 ஏரிகள் முழுமையாக நிரம்பிவிட்டன. 653 ஏரிகள் 75 சதவீத அளவுக்கும், 355 ஏரிகள் 50 சதவீத அளவுக்கும், 638 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன.

கோவை மண்டலத்தில் உள்ள 184 ஏரிகளில் 105 ஏரிகள் முழு அளவில் நிரம்பிவிட்டன. 26 ஏரிகள் 75 சதவீத அளவுக்கும், 13 ஏரிகள் 50 சதவீதத்துக்கும், 40 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன.

திருச்சி மண்டலத்தில் மொத்தமுள்ள 2,241 ஏரிகளில், 1,747 ஏரிகள் முழு அளவில் நிரம்பிவிட்டன. 222 ஏரிகள் 75 சதவீத அளவுக்கும்,90 ஏரிகள் 50 சதவீத அளவுக்கும், 182 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன.

மதுரை மண்டலத்தில் மொத்தமுள்ள 7,287 ஏரிகளில் 5,465 ஏரிகள் முழு அளவில் நிரம்பிவிட்டன. 936 ஏரிகள் 75 சதவீத அளவுக்கும், 378 ஏரிகள் 50 சதவீத அளவுக்கும், 508 ஏரிகள் 50 சதவீதத்துக்கும் குறைவாக நிரம்பி உள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT