ரயில் மோதி உயிரிழந்தோர் 2,190 பேர்!
சென்னை, டிச. 25: தமிழகத்தில் இந்த ஆண்டில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதியதில் 2,190 பேர் உயிரிழந்துள்ளனர். ÷இதில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் செல்போனில் பேசியபடி சென்றதால் பலியாகியுள்ளனர்.
சென்னை, டிச. 25: தமிழகத்தில் இந்த ஆண்டில் தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதியதில் 2,190 பேர் உயிரிழந்துள்ளனர்.
÷இதில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் செல்போனில் பேசியபடி சென்றதால் பலியாகியுள்ளனர்.
தண்டவாளங்களை விதிகளை மீறி கடக்க முயற்சிக்கும் போது ரயில்களில் அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
÷ஆளில்லாத லெவல் கிராசிங்குகளை கடக்கும்போது ஏற்படும் விபத்துகளைத் தடுக்க ரயில்வே துறை மாநில போக்குவரத்துத் துறை, நெடுஞ்சாலைத் துறையுடன் இணைந்து தீவிர விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
÷ஆனால், பணியாளர் (கேட் கீப்பர்) பணியில் உள்ள ரயில்வே லெவல்கிராசிங்குகளிலும் இரும்புக் கதவுகளின் அடியில் தங்களது இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்று ரயில் பாதையைக் கடக்கும்போது பலர் உயிரிழந்து வருகின்றனர்.
நடைமேம்பாலத்தை புறக்கணிப்பதால்... தமிழகத்தில் ரயில் பாதையைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2009- 2,180 ஆக இருந்தது. இது, இந்த ஆண்டு 2,190 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் நடைமேம்பாலங்களையும், ரயில்வே எச்சரிக்கை விதிகளையும் புறக்கணித்து ரயில் பாதையைக் கடக்க முயன்றதால் உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயமடைந்து 50-க்கும் மேற்பட்டோர் ஊனமுற்றுள்ளனர்.
செல்போன் அபாயம்: சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் செல்போனில் பேசியபடி ரயில் பாதையைக் கடக்க முயன்ற பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் இது 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்னையில் உயிரிழப்பு அதிகரிப்பு: ரயில்வே போலீஸôரின் சென்னை மண்டலத்தில் கடந்த 2009-ல் ரயிலில் அடிபட்டு 1,626 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டு கடந்த நவம்பர் 30-ம் தேதி வரை 1,581 பேர் உயிரிழந்துள்ளனர்.
÷சென்னை எழும்பூர் சரகத்தில் மிக அதிகபட்சமாக இந்த ஆண்டு இதுவரை 243 பேர் ரயில் மோதி பலியாகியுள்ளனர். சென்ட்ரல் சரகத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்
துள்ளனர்.
÷ரயில் நிலையங்களில் டி.வி.க்கள், போஸ்டர்கள், ஒலிப்பெருக்கிகள் மூலம் தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிதி ஆண்டில் மட்டும் லெவல்கிராசிங்குகளை மேம்படுத்த ரூ.51.9 கோடியும், ரயில்வே மேம்பாலங்களை அமைக்க ரூ.87.5 கோடி தெற்கு ரயில்வே பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தூர் நடை மேம்பாலம்: ஆனாலும், சென்னை கடற்கரை, கோட்டை, அம்பத்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்கள் பராமரிக்கப்படாத நிலை உள்ளது.
இதில் அம்பத்தூர் ரயில் நிலையத்துக்கு பல்லாயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
அங்கு, பிளாட்பாரங்களில் நிற்கும் மின் ரயில்களில் ஏறுவதற்காக ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள நடைமேம்பாலம் அதிக உயரமாக, செங்குத்தான படிக்கட்டுகளுடன், பராமரிக்கப்படாமல் உள்ளது.
இதனால், மின் ரயில்களில் ஏறுவதற்காக பகல், இரவுகளில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் இந்தப் பாலத்தில் ஏறி, இறங்க இயலாமல் தவிக்கின்றனர்.
வேறு வழியின்றி, பாலத்தைப் புறக்கணித்து தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிலர் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதும் தொடர்கிறது.
பொதுவாக எழும்பூர், சென்ட்ரல் ஆகிய பிரதான ரயில் நிலையங்களில் மட்டுமே சரிவுப் பாதை அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், பெரும்பாலான புறநகர் மின் ரயில் நிலையங்களில் இத்தகைய வசதிகள் இல்லாததால் மாற்றுத் திறனாளிகளும் அவதிப் படுகின்றனர்.