தமிழ்நாடு

சாமா​னி​யர் சாப்​பிட முடி​யாத ரயில் நிலைய உண​வ​கங்​கள்

திருச்சி, : ரயில் நிலையங்களில் தனியார் பங்களிப்புடன் புதிதாக 'செல்கிச்சன்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள உணவகங்களில் சாமானியர் சாப்பிட முடியாத அளவுக்கு அதிக விலை நிர்ணயிக்கப

தி. இன்பராஜ்

திருச்சி, : ரயில் நிலை யங் க ளில் தனி யார் பங் க ளிப் பு டன் புதி தாக "செல் கிச் சன்' என்ற பெய ரில் தொடங் கப் பட் டுள்ள உண வ கங் க ளில் சாமா னி யர் சாப் பிட முடி யாத அள வுக்கு அதிக விலை நிர் ண யிக் கப் பட் டுள் ளது.

ரயில் பய ணி க ளுக் குத் தர மான உணவு கிடைக் கும் வகை யில், இந் திய ரயில்வே உண வாக் கம் மற் றும் சுற் று லாக் கழ கம் (ஐ.ஆர்.சி.டி.சி) சார் பில், ரயில் நிலை யங் கள் மற் றும் ரயில் க ளில் தனி யார் பங் க ளிப் பு டன் உணவு தயா ரித்து வழங் கப் பட்டு வரு கி றது.

இங்கு உண வுப் பொருள் க ளின் விலை ஓர ளவு குறை வாக இருந் தா லும், தரம் எப் போ துமே கேள் விக் குறி யா னதே. இது கு றித்து நாள் தோ றும் பல புகார் கள் ரயில்வே நிர் வா கத் துக் குச் சென்று கொண் டி ருக் கின் றன.

இந் நி லை யில், பய ணி க ளுக்கு உயர் தர மான உணவு என்ற வாச கத் து டன் "செல் கிச் சன்' என்ற முறையை ரயில்வே உண வாக் கம் மற் றும் சுற் று லாக் கழ கம் கடந் தாண்டு அறி மு கம் செய் தது.

தெற்கு ரயில்வே எல் லைக்கு உள் பட்ட பகு தி யான அரக் கோ ணத் தில் முதல் முறை யாக கடந்த 15-02-2009 அன்று இந்த புதிய முறை தொடங் கப் பட் டது. தொடர்ந்து, திண் டுக் கல், கோட் ட யம், காட் பாடி, ஈரோடு, ஹூப்ளி ஆகிய இடங் க ளி லும், ஜூன் 9-ம் தேதி திருச் சி யி லும் இந் தப் புதிய உண வ கம் அறி மு கப் ப டுத் தப் பட் டது.

நீராவி அடுப்பு, உண வாக் கத் துறை யில் தற் போது பயன் ப டுத் தப் ப டும் நவீன கரு வி க ளு டன் அமைக் கப் பட் டுள் ள தா கக் கூறப் ப டும் இந்த உண வ கத் தில் "கேட் ட ரிங்' படித் த வர் க ளைக் கொண்டு தர மான உணவு தயா ரிக் கப் பட்டு வழங் கப் ப டு வ தாக அறி விக் கப் பட் டுள் ளது.

மேலும், ரயில் நிலை யங் க ளி லும், குறிப் பிட்ட சில ரயில் க ளி லும் மூன்று நேர மும் உணவு, காபி, டீ, குளிர் பானங் கள், தண் ணீர் உள் ளிட் ட வற்றை விற் பனை செய்ய தனி யா ருக்கு உரி மம் வழங் கப் பட் டுள் ளது.

ரயில்வே உண வாக் கம் மற் றும் சுற் று லாக் கழக அதி கா ரி கள் இந்த உண வ கங் க ளைக் கண் கா ணிப் பர் என அறி விக் கப் பட் டுள் ளது. பய ணி க ளுக் குத் தர மான உண வுப் பொருள் கள் வழங் கப் ப டு வது என் பது வர வேற் கத் தக்க விஷ ய மாக இருந் தா லும், இங்கு விற் கப் ப டும் பொருள் க ளின் விலை சாமா னி யர் சாப் பிட முடி யாத அள வுக்கு அதி க மாக உள் ளது.

உண வ கத் தில் வைக் கப் பட் டுள்ள சில பொருள் க ளின் விலை விவ ரம் : சூடான இரண்டு இட்லி - ரூ. 16, சாம் பார் இட்லி - ரூ. 19, காபி - ரூ. 15, டீ - ரூ. 15, தோசை - ரூ. 28, சாம் பார் வடை - ரூ. 18, பொங் கல் - ரூ. 28, சாம் பார் சாதம், தயிர் சாதம் ஆகி யவை ரூ. 29, மதிய சைவ சாப் பாடு- ரூ. 50 (சாதா ர ணம்) , ஸ்பெ ஷல் சைவ சாப் பாடு - ரூ. 77.

நீண்ட தொலை வில் உள்ள ஊருக் குப் பய ணிக் கும் பயணி காலை, மதி யம், இரவு மூன்று வேளை யும் சாப் பிட்டு ஒரு காபியோ அல் லது டீயோ குடித் தால் அவர் செலுத்த வேண் டிய தொகை பய ணச் சீட்டு கட் ட ணத் தை யும் தாண் டி வி டும் அள வுக்கு இந்த விலை உள் ளது.

ரயில் சேவையை அதிக அள வில் பயன் ப டுத் து வது ஏழை, நடுத் தர மக் கள் தான். ஆனால், "செல் கிச் சன்' உண வ கத் தின் விலைப் பட் டி யல் ஏழை, நடுத் தர மக் க ளுக்கு அதிர்ச் சியை ஏற் ப டுத் தும் வகை யில் இருக் கி றது. எனவே, ஏழை, நடுத் தர மக் கள் இந்த உண வ கத் துக் குள் செல்ல அச் சப் ப டும் நிலை தான் நில வு கி றது.

இந் நி லை யில், தர மான உணவு என்ற பெய ரில் தனி யார் நிறு வ னம் லாபம் பார்க்க இந் திய ரயில்வே உண வாக் கம் மற் றும் சுற் று லாக் கழ கம் அனு ம திக் க லமா? என்ற கேள்வி எழுந் துள் ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT