தமிழ்நாடு

மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படுமா?

மயிலாடுதுறை, : நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அரசு பெரியார் மருத்துவமனையைச் சீரமைத்து நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. மயிலாடுதுறைய

அ. அன்புமணி

மயிலாடுதுறை, : நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அரசு பெரியார் மருத்துவமனையைச் சீரமைத்து நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது.

மயிலாடுதுறையில் அரசு பெரியார்தலைமை மருத்துவமனை உள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ளபெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாகஇது இருப்பதால்,இந்த மருத்துவமனையின் மூலம் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய வட்டங்களைச்சேர்ந்த பொதுமக்களில் சராசரியாக நாள்தோறும் 1000-க்கும் அதிகமானோர் உள் மற்றும் வெளி நோயாளியாகச் சிகிச்சைப் பெறுகின்றனர்.

ஆனால், இந்த மருத்துவமனையின் சுற்றுப்புறப் பகுதிகளில் சாக்கடை தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், மருத்துவமனை வளாகம் முழுவதும் குப்பைமேடுகளாகக் காட்சியளிப்பதுடன், துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடுகள்நிலவுகின்றன. மேலும், மருத்துவமனை வளாகத்தில்நாய் மற்றும் பன்றித் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்குத் தேவையான கழிவறை, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.

குறிப்பாக, இப்பகுதியில்நிகழும் சாலை விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு போதிய மருத்துவ வசதி இல்லாததால், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையிலிருந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சையைப் பெற முடியாததால் பலர் உயிரிழக்க நேடுகிறது என்பதை மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

மேலும், தீவிர சிகிச்சைக்கு தஞ்சாவூர், சிதம்பரம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, சாலை அதிர்வுகளால் ரத்தப்போக்கு ஏற்பட்டு, உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

 இடப் பற்றாக்குறைக் காரணமாக, விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில்உள்ள முன் அறையில் தரையிலேயே படுக்க வைக்கப்படுகின்றனர்.

இதுதொடர்பாக, மக்கள் பிரதிநிதிகளும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நாகைமாவட்டத்தில் முக்கிய பகுதியாக உள்ள மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் எனக் கடந்த 20 ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தாலும், அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என அரசியல் கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது:

இந்த மருத்துவமனையில் 23 மருத்துவர்களும், 35 செவிலியர்களும் பணியாற்றுகின்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கைஅதிமாக இருப்பதால், அவர்களுக்கு உரிய சிகிச்சையை உடனுக்குடன் அளிக்கத் தாமதமாகிறது.

இதனிடையே, இந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் மாவட்ட மருத்துவமனையின் பரிந்துரையின் பேரில், வேறு சில ஊர்களுக்குத் தாற்காலிகப் பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.

பணியில் இருக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிக்களுக்கு சிகிச்சையளிக்க காட்டும் ஆர்வமின்மை, அலட்சியத்தாலும் உயிரிழப்புகள் தொடர்கின்றன' என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT