தமிழ்நாடு

மாற்றுத்திறுனுடைய மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு

சென்னை, மார்ச்18: பார்வையற்றோர், காது கேளாதோர், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்புப் பணியை பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தில் உ

ஆர். ஆதித்தன்

சென்னை, மார்ச்18: பார்வையற்றோர், காது கேளாதோர், மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவர்களை அடையாளம் காணும் கணக்கெடுப்புப் பணியை பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள சுமார் 6,000 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் இந்தக் கணக்கெடுப்புப் பற்றிய விவரங்களை மார்ச் மாதத்துக்குள் முடித்துவிட பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து மத்திய அரசுக்கு, இந்த விவரங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இடைநிலைக் கல்வியை அனைத்து தரப்பு மாணவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதில் பார்வையற்றோர், பார்வைத் திறன் குறைபாடு, கற்றலில் குறைபாடு, உடல் ஊனமுற்றோர், காது கேளாதோர், மூளை வளர்ச்சி குறைபாடு உடையோர், வாய் பேச முடியாதோர் உள்ளிட்ட மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய திட்டம்: இதற்காக, மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வி வழங்கும் திட்டம் (ஐ.இ.டி.எஸ்.எஸ்.) என்ற புதிய திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின்படி 8}ம் வகுப்பு வரை படித்துள்ள மாற்றுத் திறுனுடைய  மாணவர்கள், அடுத்த கட்டமாக 9}ம் வகுப்பு முதல் 12}ம் வகுப்பு வரையில் தங்களது 4 ஆண்டு மேல்நிலைக் கல்வியைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அதாவது 14 வயது முதல் 18 வயது வரையிலான மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கு இடைநிலைக் கல்வி வழங்கப்பட உள்ளது.

கணக்கெடுப்பு பணி துவக்கம்: இதற்காக மாற்றுத் திறனுடைய மாணவர்களை அடையாளம் காணும் பணியை, தமிழகப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது. மாற்றுத் திறுனுடைய மாணவர்களை அடையாளம் காண்பது குறித்த ஒரு படிவத்தையும் தயாரித்துள்ளது.

அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் 9}ம் வகுப்பு முதல் 12}ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். அதில் மாற்றுத் திறுனுடைய மாணவர்கள் அடையாளம் காணப்படுவர். இதுதவிர பள்ளித் தலைமை ஆசிரியர்களிடமும், மாற்றுத் திறுனுடைய மாணவர்கள் குறித்து விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

மாணவிகளுக்கு உதவித் தொகை: "மாற்றுத் திறுனுடைய மாணவர்களுக்கு பாடங்களைப் பயிற்றுவிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இப்பயிற்சி அளிக்கப்படும். மாற்றுத் திறுனுடைய ஒவ்வொரு மாணவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு இடைநிலைக் கல்வி வழங்கப்படும். அவர்களுக்குப் போதிய உபகரணங்கள், உதவிகள் உள்ளிட்டவை வழங்கப்படும்.

உடல் ஊனமுற்ற மாணவர்கள் வகுப்பறை மற்றும் ஆய்வகங்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் கட்டடங்கள் மற்றும் சாய்வுப் பாதைகள் அமைக்கப்படும். அதேபோல மாற்றுத்திறுனுடைய மாணவர்களுக்கு சிறப்புக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு மாநிலத்திலும் மாதிரி பள்ளிகள்

அமைக்கப்பட உள்ளன.   இதுதவிர மாற்றுத் திறுனுடைய மாணவிகளுக்கு சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும்' என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர்களுக்குப் பயிற்சி: மத்திய அரசின் இத்திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறுனுடைய குழந்தைகள், அவர்களின் பெற்றோர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT