முகப்பு
தமிழ்நாடு

முறைப்படுத்தப்படாத ஆசிரியர்-மாணவர் விகிதம்

பேராவூரணி: அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்தப்படுமா என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.  மத்த

தமிழ்நாடு

முறைப்படுத்தப்படாத ஆசிரியர்-மாணவர் விகிதம்

பேராவூரணி: அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்தப்படுமா என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.  மத்த

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:53 PM
பகிர்:

பேராவூரணி: அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற ஆசிரியர் - மாணவர் விகிதம் நடைமுறைப்படுத்தப்படுமா என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

 மத்திய அரசு 01.4.2010-ல் இயற்றிய இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:30 என்றிருக்க வேண்டும். இதை அமல்படுத்த மாநில அரசும் இதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் 1:30 என்பது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இது நடைமுறைப்படுத்தப்படாததால், மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது.

 தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக சேர்க்கை விகிதம் பெரும்பான்மையான பகுதிகளில் 10 -லிருந்து 15 சதம் குறைந்து வருகிறது. இதற்கு தனியார் பள்ளிகளின் ஆதிக்கம், பிறப்பு விகிதம் குறைவு போன்ற காரணங்கள் கூறப்படுகின்றன.

 தொடக்கநிலை வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர், உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளுக்கு அரசுப் பள்ளிகளை நாடுவதால் சேர்க்கை விகிதம் அதிகரிக்கிறது.

 பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், ஒரு வகுப்பறைக்கு 100 மாணவர்கள் என்ற நிலையும் உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்விச் சட்டத்தை மாநில அரசு இயற்றினால் செலவிடப்படும் நிதியில் மத்திய அரசு 65 சதம் வழங்குகிறது. இந்த நிதி வடகிழக்கு மாநிலங்களுக்கு 90 சதம் வழங்கப்படுகிறது. ஆசிரியர் - மாணவர் விகிதத்தை 1:30 என்று நடைமுறைப்படுத்தினால், ஆசிரியர் பட்டயப் பயிற்சி, பி.எட் படித்த ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது.

 இதுகுறித்து வழக்குரைஞர் ப. பாலசுப்பிரமணியன் கூறியது:

 மத்திய அரசின் இலவசக் கட்டாய ஆரம்ப கல்விச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற சட்டம் இயற்றி ஆசிரியர் - மாணவர் விகித்தை 1:30 என்ற நிலைக்கு கொண்டு வந்தால், அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயரும்.

 கல்விக்கென கோடிக்கணக்கான ரூபாயை அரசு செலவிட்டும் தரமான கல்விக்கு தனியார் பள்ளிகளை நாடும் நிலை உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையே.

 மேலும், மத்திய அரசின் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதம் இடம் ஒதுக்க வேண்டும். இதற்கான முயற்சி எதுவும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அரசு தொடக்கப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே..ஜி வகுப்புகளை தொடங்குவதன் மூலம் தனியார் பள்ளிகளுக்கு குழந்தைகள் செல்வதைத் தவிர்க்க முடியும்.

 கல்வித் துறைக்கென பல திட்டங்களை அறிவித்துள்ள அரசு ஆக்கப்பூர்வமான இந்தத் திட்டங்களை வரும் கல்வி ஆண்டிலாவது நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

 மாணவர்களுக்கு பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவிப்பதோடு நின்று விடாமல், கல்வியின் தரம் உயர 1:30 என்ற விகிதத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

முழு கட்டுரையைப் படிக்க →