தமிழ்நாடு

ஓராண்டாக மூடிக் கிடக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

செங்கல்பட்டு, டிச. 3: செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான கட்டடம் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் அருகே ரூ.1.5 கோடி செலவில் பொதுப்பணித் து

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு, டிச. 3: செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான கட்டடம் கட்டி முடித்து ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

செங்கல்பட்டை அடுத்த பரனூர் அருகே ரூ.1.5 கோடி செலவில் பொதுப்பணித் துறையால் கட்டி முடிக்கப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கான கட்டடம் ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ளது.

பொதுப்பணித் துறையிடமிருந்து 6 மாதத்துக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட கட்டடப் பொறுப்பை பெற்றுதான் திறப்பு விழாவுக்கு, அனுமதி பெறவேண்டும் என்று கூறிய வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர். இந்நிலையில் பொதுப்பணித் துறை, பொறுப்புகளை உரிய நேரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்காததால் புதிய கட்டடம் பழைய கட்டடமாகும் நிலைக்கு தள்ளப்பட்டுவிடுமோ? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மேலும் பரனூரில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுகளாக காத்திருக்கும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பக்கத்தில் பஞ்சாயத்துக்குச் சொந்தமான 80 சென்ட் இடத்தைப் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், வாகனங்கள் நிறுத்தி கொள்ளவதற்கு அதிகாரிகள் கேட்டிருந்தனர். அந்த இடத்தையும் சம்மந்தப்பட்டவர்கள் ஒப்புதல் அளித்து கொடுத்து விட்டனர்.

அனைத்து வசதிகளுக்கும் ஏதுவாக பரனூரில் கட்டப்பட்டுள்ள கட்டடம் என்ன எதிர்பார்ப்புகளுக்காக திறக்கப்படாமல் உள்ளது? என்பதே பொதுமக்களிடம் கேள்வியாக உள்ளது. தற்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், செங்கல்பட்டு அண்ணா நகரில் உள்ள வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. மாதத்துக்கு வாடகை ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் கொடுக்கப்படுகிறது. கட்டடம் கட்டடப்படாத நிலையில் வாடகை கொடுப்பது நியாயம். புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டும் வாடகைக் கட்டடத்தில் இயக்கப்படுவது மக்களின் வரிப் பணமும் அரசுப் பணமும் வீணாக்கப்படுவதாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

விரைவில் சம்மந்தபட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்வார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகள் அரசு கவனத்துக்கு செல்லும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வட்டாரப் போக்குவரத்து புதிய கட்டடத்தைத் திறக்க வழி செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT