முகப்பு
தமிழ்நாடு

விபத்துகளை ஏற்படுத்தும் படுகுழிகள்... செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையின் அவலம்

செஞ்சி, ஜன. 31:  திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள படுகுழிகளால், தினமும் 10 விபத்துகளாவது ஏற்படுகின்றன. இந்த தேசிய நெடுஞ்சாலை, கடந்த பல ஆண்டுக

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:19 PM
பகிர்:

செஞ்சி, ஜன. 31:  திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள படுகுழிகளால், தினமும் 10 விபத்துகளாவது ஏற்படுகின்றன.

இந்த தேசிய நெடுஞ்சாலை, கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் சின்னாபின்னமாகி உள்ளது.

சென்னை மற்றும் புதுச்சேரி பயணிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெங்களூர் பயணம் மேற்கொள்ள இந்த வழியில்தான் செல்ல வேண்டும்.

பல்வேறு சரக்கு பறிமாற்றங்களுக்கும், ஏற்றுமதி இறக்குமதிக்கும் பெரும் பயனாக இச்சாலை உள்ளது.

ஆனால் பல ஆண்டுகளாக, ஒரு அடி பள்ளங்கள் ஏற்பட்டு மரணக்குழிகளாக மாறி உள்ளது இச் சாலை. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மேலும் அதிக அளவில் சாலை சீரழிந்து விட்டது.

இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பஸ், கார், லாரி, ஆட்டோ உள்ளிட்டவை பெரும் சிரமத்துக்கு உள்ளாகி விபத்து ஏற்படுகிறது.

வலது புறத்தில் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு வாகனம் சாலையில் பள்ளம் உள்ளதால் திடீரென இடது புறம் சென்று மீண்டும் வலது புறத்தில் ஓட்டி செல்கின்றனர். இதே போன்று சாலை விதிகளை மீறி செல்லும்போது சாலை விபத்து ஏற்படுகிறது. படுகுழிகளை தாற்காலிகமாவது கூட பேச் ஒர்க் செய்வதில்லை.

மேலும் செஞ்சிக் கோட்டையில் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இரு புறமும், இலந்தை முள் செடிகள் சாலையில் வளர்ந்து படர்ந்துள்ளது.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பஸ்ஸýக்காக ஓரம் ஒதுங்கும்போது முள் பதம் பார்க்கிறது.

செஞ்சியில் இருந்து நடைப்பயிற்சி செல்வோரும் வாகனம் வரும் போது சாலை ஓரத்தில் ஒதுங்க முடியாத அளவுக்கு இலந்தை முள் செடிகள் வளர்ந்துள்ளன. ஆனால் இவ்வழியாக செல்லும் அதிகாரிகளும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

தொடர் விபத்துகள் ஏற்பட்டும் கூட அதிகாரிகள் அலட்சியம் தொடர்கிறது. சென்னையில் இருந்தும், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மாதந்தோறும் நடைபெறும் திருவண்ணாமலை கிரிவலம் மற்றும் மேல்மலையனூர் அமாவாசை திருவிழா உள்ளிட்டவற்றில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வழியை பயன்படுத்துகின்றனர்.

ஆனால் இவர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பும், உத்தரவாதமும் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →