தமிழ்நாடு

எப்போது தீரும் பஸ்நிலைய பிரச்னைகள்?

ஆரணி 16: ஆரணி பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணி துவங்க உள்ளதாகக் கூறி பேருந்துகளை தாற்காலிகமாக மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும்

பி.ஜெயச்சந்திரன்

ஆரணி 16: ஆரணி பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணி துவங்க உள்ளதாகக் கூறி பேருந்துகளை தாற்காலிகமாக மாற்று இடத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பழைய பேருந்துநிலையத்தில் நவீனப்படுத்தும் பணி இன்னும் துவங்வில்லை

 மேலும், தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாமல் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

 ஆரணி பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிக்காக ரூ.1 கோடி மதிப்பில் டெண்டர் விடப்பட்டு அண்மையில் பூமி பூஜையும் போடப்பட்டது. பூமி பூஜை போடப்பட்டு 20 நாட்களாகியும் இன்னும் பணியை துவக்காமல் உள்ளனர். மேலும், பணி துவக்குவதற்காக பேருந்து நிலையத்தை தாற்காலிகமாக கோட்டைமைதானத்துக்கு மாற்றினர்.

 இதன்பிறகும் பணியை துவக்காமலேயே உள்ளனர். இதன் காரணமாக தாற்காலிக பேருந்து நிலையத்துக்கு செல்லும் பயணிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர். இதனால் பேருந்து நிலையத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இது குறித்து பேருந்து நிலையத்தை கட்டுவதற்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் அசோக்குமாரிடம் கேட்டதற்கு, பேருந்துநிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை காலி செய்து தருவதாகக் கூறிய நகராட்சி நிர்வாகம் இன்னும் காலி செய்ய நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. மேலும் டெண்டர் எடுத்ததின் ஒப்பந்த நகலையும் தராமல் உள்ளனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணியை துவங்க முடியும் என்று தெரிவித்தார்.

 இது குறித்து நகராட்சி ஆணையாளர் சசிகலாவிடம் கேட்க முயற்சி செய்து பார்த்ததில் சரியான பதில் இல்லை.

 இது குறித்து தன்னார்வலர்கள் கூறியது: தற்போது கோட்டைமைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது செய்து தரவேண்டும். பயணிகள் நிழலில் நிற்பதற்கு இடம் இல்லாமல் வெயிலிலேயே நின்றபடி பேருந்துக்காகக் காத்திருக்கின்றனர்.

 கழிப்பிட வசதி இல்லாததால் பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். குறைந்தபட்ச அடிப்படை வசதியை நகராட்சி நிர்வாகம் செய்தபின்னர் தாற்காலிகப் பேருந்து நிலையத்தில் பேருந்துகளை விட்டிருக்க வேண்டும்.

 ஏற்கெனவே, காந்தி சாலையில் சிமென்ட் சாலை போடுவதற்காக 6 மாத காலம் கோட்டைமைதானத்தில் பேருந்து நிலையம் செயல்பட்டது. அப்போதும் அடிப்படை வசதி செய்து தராமல் பயணிகளை அலையவிட்டனர் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT