மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறப்பு
மேட்டூர், ஜன. 8: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆய
மேட்டூர், ஜன. 8: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் நீரின் அளவு இம்மாதம் 5-ந் தேதி வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
தற்போது காவிரி டெல்டா பகுதியில் மழை இல்லாத காரணத்தால் பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால், சனிக்கிழமை மாலை முதல் பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை பகல் 12 மணிக்கு அணையின் நீர் மட்டம் 118.35 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,456 கன அடிவீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. நீர் இருப்பு 90.86 டி.எம்.சியாக இருந்தது.