தமிழ்நாடு

முதல் பட்டதாரி ரூ.1.25 லட்சம் கல்விக் கட்டணச் சலுகை: தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கஷ்டம் தீருமா?

தேனி, ஜூலை 9: குடும்பத்தில் முதல் பட்டதாரி கல்வி கட்டணச் சலுகைத் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) அரசு அறிவித்திருந்த ரூ.1.25 லட்சம் சலுகை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்த

கோ.ராஜன்

தேனி, ஜூலை 9: குடும்பத்தில் முதல் பட்டதாரி கல்வி கட்டணச் சலுகைத் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் (2010-11) அரசு அறிவித்திருந்த ரூ.1.25 லட்சம் சலுகை கிடைக்காத நிலையில், இந்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் சுயநிதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.

 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், கால்நடை மருத்துக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஒற்றைச் சாளர முறையில் சேரும் மாணவர்களில், குடும்பத்தில் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு 2010-2011-ம் கல்வி ஆண்டு முதல் கல்விக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

 இந்தத் திட்டத்தின் மூலம் நிதி உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2010-ம் ஆண்டு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் தமிழகத்தில் கடந்த ஆண்டு செயல்பட்ட 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கான கல்வி கட்டணச் சலுகை ரூ.1.25 லட்சம் இதுவரை வழங்கப்படவில்லை.

 இது குறித்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் படித்து வரும் முதல் பட்டதாரி மாணவி ஒருவரின் தந்தையான கூடலூரைச் சேர்ந்த மோகன் கூறியதாவது:÷"தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு சலுகை கிடைக்கும் வகையில் கடந்த ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.1.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதனால் குடும்பத்தில் முதல் பட்டதாரி கல்விக் கட்டணச் சலுகை ரூ.1.25 லட்சத்தை எதிர்பார்த்து ஆண்டுக் கட்டணத்தைச் செலுத்தியிருந்தோம்.

 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு பெற்று படித்துவரும் மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தில் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இதுவரை கல்விக் கட்டணச் சலுகை ரூ.1.25 லட்சம் கிடைக்கவில்லை.

 இந்த நிலையில், இப்போது 2-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் முதல் பட்டதாரி திட்டத்தில் கட்டணச் சலுகையை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் நலன் கருதி, ரூ.1.25 லட்சம் கட்டணச் சலுகையை சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT