தமிழ்நாடு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பழுதடைந்த ஸ்கேன் இயந்திரம்: நோயாளிகள் அவதி

கடலூர், ஏப். 15: கடலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் இயந்திரம் பழுதாகி மூன்று மாதங்கள் ஆகியும் சீர்செய்யப்படவில்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனி

ஜீவ. இராம ஸ்ரீநிவாஸன்

கடலூர், ஏப். 15: கடலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் இயந்திரம் பழுதாகி மூன்று மாதங்கள் ஆகியும் சீர்செய்யப்படவில்லை. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 ÷தமிழக அரசு பொது மக்களுக்கு மருத்துவ வசதி அளிப்பதற்காக கிராம அளவில் ஆரம்ப சுகாதார நிலையமும், நகரத்தில் அரசு மருத்துவமனையும், மாவட்ட அளவில் அரசு தலைமை பொது மருத்துவமனையும் அமைத்து சுகாதார பணி செய்து வருகிறது.

 ÷கிராம மற்றும் நகர மருத்துவமனைகளில் போதிய வசதி இல்லாதபோது, நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பர். இவ்வாறு அனுப்பப்படும் நோயாளிகளின் நோயைக் கண்டறியவும், நோய்க்கான சிகிச்சை அளிக்கவும் ஸ்கேன் இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரத்தில் ஏற்படும் கோளாறு மற்றும் பழுதுகளை தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் சரிசெய்து பராமரித்து வருகிறது.

 ÷கடலூர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஸ்கேன் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த சி.டி.ஸ்கேன் இயந்திரம் கடந்த மூன்று மாதகாலமாக பழுதடைந்து செயல்படமால் உள்ளது. இதனால் நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து ஸ்கேன் எடுக்கின்றனர்.

 ÷இதுகுறித்து விசாரித்ததில், கடலூர் மாவட்டத்தில் இருந்து விபத்து மற்றும் இதர வகையில் மேல் சிகிச்சைக்காக ஏராளமானோர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர். மாவட்ட மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க உள்நோயாளிகளுக்கு ரூ.350 கட்டணமும், வெளி நோயாளிகளிடம் ரூ.500-ம் கட்டணமாக பெறப்பட்டது. இதனால் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

 கடந்த மூன்று மாத காலமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் கடலூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். இங்கு ஸ்கேன் எடுக்க பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதுடன், நோயாளிகளுக்கு அலைச்சல் ஏற்படுவதுடன் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஏழை நோயாளிகள் ஸ்கேன் எடுக்க முடியாமல் அவதி அடைகின்றனர்.÷எனவே ஏழைகளின் நலன் கருதி கடலூர் மருத்துவமனையில் பழுதடைந்துள்ள ஸ்கேன் இயந்திரத்தை உடனடியாக பழுது நீக்கி இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT