முகப்பு
தமிழ்நாடு

கட்டி முடித்து திறக்கப்படாத மகளிர் சுகாதார வளாகம், நூலகம்

சிதம்பரம், ஏப். 21:சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், நூலகம் ஆகியவை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.  ÷மேல்புவனகிரி ஒன

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

சிதம்பரம், ஏப். 21:சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம், நூலகம் ஆகியவை கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பாடின்றி பூட்டிக்கிடக்கிறது.

 ÷மேல்புவனகிரி ஒன்றியத்துக்குட்பட்ட லால்புரம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 2010-11-ம் ஆண்டில் ரூ.3 லட்சத்து 85 ஆயிரம் செலவில் நூலகம் கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாக செயல்பாடின்றி பூட்டப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படாமல் இருப்பது வேதனையளிப்பதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர்.÷அதேபோன்று லால்புரம் ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் பராமரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார மையம் புதிதாகக் கட்டப்பட்டு கடந்த 6 மாதங்களாக திறக்கப்படாமல் பூட்டப்பட்டு செயல்பாடின்றி உள்ளது.

 ÷எனவே திறக்கப்படாமல் உள்ள ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தையும், நூலகத்தையும் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.