தமிழ்நாடு

மழை நீர் கிடங்காக மாறிய உணவுக் கிடங்கு வளாகம்

சிதம்பரம், ஆக. 11: சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மணலூர் பகுதியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு செயல்பட்டு வருகிறது.  சிதம்பரம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைக

ஜி. சுந்தர் ராஜன்

சிதம்பரம், ஆக. 11: சிதம்பரம் அருகே லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட மணலூர் பகுதியில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்கு செயல்பட்டு வருகிறது.

 சிதம்பரம் கோட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உணவுப் பொருட்கள் இந்த குடோனில் பாதுகாப்பாக வைத்து சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் மழை காரணமாக நுகர்பொருள் வாணிபக் கழக குடோனின் உள்ளே மழைநீர் தேங்கி வெளியே செல்லமுடியாமல் குட்டை போல் காட்சியளிக்கிறது. இதில் உணவு பொருட்களை ஏற்றிகொண்டு லாரிகள் உள்ளே சென்று வருவதால், அந்த இடம் சேரும் சகதியுமாக மாறிவிட்டது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசுகிறது. எனவே உணவுப் பொருட்களை பாதுகாக்கும் இடம், இந்த அளவுக்கு மோசமாக இருப்பதால் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து வாணிபக் கிடங்கின் உள்ளே மழைநீர் தேங்காமல் இருக்க சிமெண்ட்தளம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT