தமிழ்நாடு

பறிபோகிறது தமிழகத்தின் மற்றொரு நதிநீர் உரிமை

கிருஷ்ணகிரி, பிப். 19: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நதிநீர் பகிர்வு பிரச்னைகளைத் தொடர்ந்து இப்போது தென்பெண்ணையாற்று நீரை தமிழகத்துக்கு வராமல் தடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதற்கான திட்டத்த

ஆா்.ராதாகிருஷ்ணணன்

கிருஷ்ணகிரி, பிப். 19: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு ஆகிய நதிநீர் பகிர்வு பிரச்னைகளைத் தொடர்ந்து இப்போது தென்பெண்ணையாற்று நீரை தமிழகத்துக்கு வராமல் தடுக்கும் முயற்சி நடைபெறுகிறது. அதற்கான திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் பாலைவனமாக மாறும் அபாயநிலை ஏற்பட உள்ளது.

தென்பெண்ணை ஆறு கர்நாடக மாநிலம் நந்தி மலைத்தொடரில் பிறந்து ஹொசகோட்டை, ஒரத்தூர் வழியாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒசூர் அருகே உள்ள கொடியாளம் அணையை வந்தடைகிறது. அதைத் தொடர்ந்து கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைகளுக்குத் தண்ணீர் வந்தடைகிறது. இந்த நதியில் பெங்களூர் மாநகரத்தின் கழிவுநீர், மழைநீர் மற்றும் காவிரி குடிநீர்த் திட்டத்தின் உபரி நீரும் கலக்கிறது.

இதில் கொடியாளம் அணை மூலம் 2 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலமும், கெலவரப்பள்ளி அணை மூலம் 9 ஆயிரம் ஏக்கர் நிலம், கே.ஆர்.பி. அணை மூலம் 19 ஆயிரம் ஏக்கர் நிலமும், அணையிலிருந்து இணைப்பு கால்வாய்கள் மூலம் 13 ஏரிகள் உள்பட கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 36 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இப்பகுதியில் கரும்பு, நெல், கேழ்வரகு, தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ், கத்தரிக்காய், வெற்றிலை, வாழை, பாக்கு, தென்னை உள்ளிட்ட பயிர்களும், மலர் வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்த மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாயத் தேவையையும், ஒசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் வீடுகள், ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளின் குடிநீர் தேவையையும் தென்பெண்ணையாறுதான் நிறைவுசெய்து வருகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜீவநதியாக விளங்கும் தென்பெண்ணை ஆற்று நதி நீரை தமிழகத்துக்குள் வராமல் தடுத்து, கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள ஒரத்தூர் ஏரியிலிருந்து மாலூர் வட்டத்துக்குள்பட்ட 160 ஏரிகளுக்கு தண்ணீரை திருப்பிவிடும் புதிய திட்டத்தை கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக மாநில அறநிலையத் துறை முன்னாள் அமைச்சரும், மாலுர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான கிருஷ்ணய்ய செட்டி சனிக்கிழமை மாலூரில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியது: மாலூர் வட்டத்தில் உள்ள சுமார் 160 ஏரிகள், தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. எனவே, ஒரத்தூரிலிருந்து தென்பெண்ணை ஆற்று நீரை மிண்டஹள்ளி ஏரி வழியாக திருப்பிவிட்டு, அங்கிருந்து மாலூர் வட்டத்துக்குள்பட்ட அனைத்து ஏரிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக மாநில அரசு முதல் கட்டமாக ரூ.36 கோடி ஒதுக்கியுள்ளது என்றார்.

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த விவசாய நிலங்களும் பாலைவனமாக மாறும் அவலநிலை ஏற்படும்.

எனவே, இத்திட்டத்தை கைவிடுமாறு கர்நாடக அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இரு மாநில நல்லுறவை காத்திடும் வகையில், தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT