தமிழ்நாடு

ரிசர்வ் வங்கியின் விதிகளைப் பின்பற்றாத வங்கிகள்

சென்னை, பிப். 20: சென்னையில் உள்ள பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கி விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.  சென்னை பெருங்குடி ராஜ

கே.வாசுதேவன்

சென்னை, பிப். 20: சென்னையில் உள்ள பெரும்பாலான வங்கிகள் ரிசர்வ் வங்கி விதித்துள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் துப்பாக்கி முனையில் கொள்ளையடிப்பது தொடர்ந்து நடைபெறுகிறது.

 சென்னை பெருங்குடி ராஜீவ் காந்தி சாலையில் பரோடா வங்கியில் ஜனவரி 23-ம் தேதி துப்பாக்கியுடன் புகுந்த 4 அடையாளம் தெரியாத நபர்கள் ரூ.18 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

 அந்த வங்கியில் கண்காணிப்புக் கேமராவும், காவலாளியும் இல்லாததால் கொள்ளையர்களைக் கண்டறியக்கூட முடியாத நிலையில் காவல்துறை உள்ளது.

 இச்சம்பவம் நடைபெற்று 27 நாள்களே கடந்துள்ள நிலையில், கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் துப்பாக்கி முனையில் மீண்டும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது காவல்துறையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

 இந்த வங்கியிலும் கண்காணிப்பு கேமரா, காவலாளி இல்லாததை நோட்டமிட்டே மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

 ஏற்கனவே நடந்த வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்காத நிலையில், மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது காவல்துறை அதிகாரிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

 பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளை சம்பவம் நடைபெற்ற பின்னர், ஒவ்வொரு வங்கியிலும் ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும். துப்பாக்கி ஏந்திய காவலர் வங்கியின் வாயிலில் நிறுத்தப்பட வேண்டும். அபாய மணி பொருத்தப்பட வேண்டும். வாசல் இருவர் செல்லும் வகையிலே இருக்க வேண்டும். ஒரு வாசலையே பயன்படுத்த வேண்டும். செல்போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

 அதிகநேரம் வங்கிக்குள் அந்நியர்களை நிற்க அனுமதிக்கக் கூடாது. உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் செயல்முறைபடுத்தப்பட வேண்டும் என்று பெருநகர காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

 பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படுமா?

 இதற்காக பெருநகர காவல்துறையில் வங்கி பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் இருமுறை நடைபெற்றது. இதற்கு அடுத்தக் கட்டமாக ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் உள்பட்ட வங்கிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக ஆய்வு செய்து, அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கி வந்தனர்.

 இப்போது கொள்ளை நடைபெற்றுள்ள வங்கியிலும் காவல்துறையினர் 2 நாள்கள் முன்பு ஆய்வு செய்து, அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தும்படியும், காவலாளி நியமிக்கும் படியும் ஆலோசனை வழங்கியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

 ஆனால் வங்கி நிர்வாகம், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்பே கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதேபோன்ற சென்னையில் பல வங்கிகள், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்களும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களே என காவல்துறை அதிகாரிகள் கணித்து இருக்கின்றனர். இருப்பினும் கண்காணிப்பு கேமரா இல்லாததால், மர்ம நபர்களை பற்றிய தகவல்களை திரட்டுவதில் இடர்பாடு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி தெரிவிக்கிறார்.

 இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, வங்கிகள் இனியாவது பாதுகாப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என காவல்துறையினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

 பொம்மை துப்பாக்கி...!

 கொள்ளை சம்பவத்தில் 3 பேர் துப்பாக்கியை காட்டியுள்ளனர். இந்த 3 துப்பாக்கிகளும் ஒரே மாதிரி இருந்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த துப்பாக்கிகள், ஏர்-கன் வகையைச் சேர்ந்தது எனவும், சிறுவர் விளையாடுவதற்கு பயன்படுத்துவது எனவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஏற்கனவே பெருங்குடி பரோடா வங்கி கொள்ளைச் சம்பவத்திலும், இதேபோல பொம்மைத் துப்பாக்கிதான் பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே சம்பவத்தின்போது வங்கிக்குள் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களிடம் இரவு 10 மணிக்கு மேலும் போலீஸôர் விசாரணை செய்தனர். இதில் பெருங்குடி பரோடா வங்கியில் கொள்ளையடித்த கும்பல்தான், இந்த சம்பவத்திலும் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீஸôரால் உறுதியாக நம்பப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT