தமிழ்நாடு

தமிழகத்தில் வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை அறிவுறுத்தல்

சென்னை, பிப்.22: சென்னை வங்கிகளில் நடைபெற்ற தொடர்கொள்ளை விளைவாக, தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் க

கே.வாசுதேவன்

சென்னை, பிப்.22: சென்னை வங்கிகளில் நடைபெற்ற தொடர்கொள்ளை விளைவாக, தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 சென்னை பெருங்குடி பரோடா வங்கியில் கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி ஒரு கும்பல் ரூ. 18 லட்சம் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிது. இதேபோல கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடந்த 20-ம் தேதி ஒரு கும்பல் ரூ. 14 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றது.

 இந்த இரு சம்பவங்களும் மாநிலத்தையே அதிர்ச்சியடையச் செய்தது. இரு வங்கிகளிலும் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை சாதகமாக்கிக் கொண்டு மர்ம நபர்கள் எளிதாகக் கொள்ளையடித்துச் சென்றனர். இதனால் காவல்துறையினர் துப்பு துலக்குவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

 பரோடா வங்கி கொள்ளைச் சம்பவம் நடந்த பின்னர், பல முறை வங்கி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை சென்னை காவல்துறை நடத்தியது. இதில் வங்கிகளில் கண்காணிப்புக் கேமரா, காவலாளி, அபாய எச்சரிக்கை மணி உள்ளிட்ட ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

 ஆனால் இதன் பின்னரும் சில வங்கிகள் பாதுகாப்பு வசதிகளை செய்வதில் போதுமான ஆர்வம் காட்டாமலும், மெத்தனப் போக்குடனும் செயல்பட்டதின் விளைவே, கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கொள்ளை நடைபெறுவதற்குக் காரணம் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

 இதன் காரணமாக கொள்ளை, திருட்டு போன்ற அசம்பாவிதச் சம்பவங்கள் வங்கிகளில் நடைபெறாமல் தடுப்பதற்குத் தேவையான அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் துணையோடு வலியுறுத்தத் தொடங்கியுள்ளது தமிழகக் காவல்துறை. இதற்கு சென்னையில் ஓரளவு பயனும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

 மேம்படுத்தப்படும் பாதுகாப்பு: இதேபோல மாநிலம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை அதிகரிக்கும்படி காவல்துறையினருக்கு டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

 அதன்படி மாவட்டங்களிலும் மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து மாநகரங்களிலும் வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 இதற்காக வங்கி நிர்வாகங்களுடன் காவல்துறை ஆலோசனைக் கூட்டம் நடத்தி, வங்கிகளில் கண்டிப்பாக கண்காணிப்புக் கேமரா, துப்பாக்கி ஏந்திய காவலாளி, அபாய எச்சரிக்கை மணி ஆகிய வசதிகளை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்

 வடக்கு மண்டலத்தில் உள்ள 6 மாவட்டங்களில் சுமார் 1,800 வங்கிக் கிளைகள் இருக்கின்றன. இவற்றில் கூட்டுறவு வங்கிகள் ஆயிரம் உள்ளன. அரசுடமை வங்கிக் கிளைகள், தனியார் வங்கிக் கிளைகள் 800 உள்ளன.

 "இந்த வங்கிக் கிளைகளில் கண்காணிப்புக் கேமரா, துப்பாக்கி ஏந்திய காவலாளி, அபாய எச்சரிக்கை மணி ஆகிய வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். அதேவேளையில் வங்கிகள் இருக்கும் பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணியை அதிகரிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார் வடக்கு மண்டல ஐ.ஜி. சைலேந்திரபாபு.

 ஆலோசனைக் கூட்டம்: இதேபோல மத்திய மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களிலும் வங்கிகளின் பாதுகாப்பை மேம்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றார் மத்திய மண்டல ஐ.ஜி. அலெக்ஸôண்டர் மோகன்.

 கோவை மண்டலம், தென் மண்டலப் பகுதிகளில் வங்கிகளின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்தந்த வங்கி நிர்வாகங்களை காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர். காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

 இதனால் வங்களில் பாதுகாப்பு பலப்படுவதோடு, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களும் நடைபெறாமல் தடுக்கும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகக் காவல்துறை கருதுகிறது.

 அதேவேளையில் வங்கிகளும் தங்களது பாதுகாப்பை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும். இல்லையெனில் பாதுகாப்புக் குறைபாடுகளையே தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு மர்ம நபர்கள் கொள்ளை, திருட்டில் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகவே ஆகிவிடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT