தமிழ்நாடு

வெளி மாநிலத் தொழிலாளர் குறித்து தகவல் சேகரிக்கும் பணி தீவிரம்

சென்னை: சென்னையில் வெளி மாநிலத் தொழிலாளர்களால் அதிகரிக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களைப் பற்றிய தகவல்களை போலீஸôர் புகைப்படத்துடன் தீவிரமாக திரட்டி வருகின்றனர்.  சென்னையில் அண்மைக்

கே.வாசுதேவன்

சென்னை: சென்னையில் வெளி மாநிலத் தொழிலாளர்களால் அதிகரிக்கும் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், அவர்களைப் பற்றிய தகவல்களை போலீஸôர் புகைப்படத்துடன் தீவிரமாக திரட்டி வருகின்றனர்.

 சென்னையில் அண்மைக் காலமாக வெளி மாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வழிப்பறி, திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கைவரிசை அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

 கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் திங்கள்கிழமை வட மாநில இளைஞர்கள் துப்பாக்கி முனையில் ரூ. 14 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

 அதேபோல கடந்த ஜனவரி மாதம் 23-ம் தேதி பெருங்குடி வங்கியில் துப்பாக்கி முனையில் நடைபெற்ற கொள்ளையிலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் ஈடுபட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

 மேலும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களுக்கு முன்பு தாம்பரத்தில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதும் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களே.

 மாநகரில் தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், சுகாதார நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்களில் 60 சதவீதம்வரை வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே இருக்கின்றனர். கட்டுமானப் பணியில் மட்டும் 1.20 லட்சம் பேர் உள்ளனர்.

 நிறைவான ஊதியம், பணிக்கு உத்தரவாதம் ஆகிய காரணங்களால் சென்னையில் வேலை செய்வதற்கு வடமாநில தொழிலாளர்கள் விரும்புகின்றனர்.

 இக் காரணங்களால் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து வேலைக்காக சென்னை நோக்கி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

 அதே வேளையில் தொழிலாளர்கள் என்கிற போர்வையில் சமூக விரோதிகளும் சென்னைக்குள் ஊடுருவி வருகின்றனர். இவர்கள் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபடும்போது, அது குறித்து அதிகளவில் அக்கறை எடுத்துக் கொள்ளாத காவல்துறை, இப்போது சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அளவுக்கு அவர்கள் பெரிய குற்றங்களில் ஈடுபடுவதால் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

 தகவல் சேகரிப்பு

 பெருங்குடி வங்கி கொள்ளைக்குப் பின்னர், வெளி மாநிலத் தொழிலாளர்கள் குறித்த தகவல்களைத் திரட்டும் பணியை பெருநகர காவல்துறை தீவிரமாகியுள்ளது.

 இதில் தொழிலாளர்களின் புகைப்படம், முகவரி, பணிபுரியும் இடம், நிறுவனம், குற்றப் பின்னணி ஏதேனும் இருக்கிறதா போன்ற தகவல் பெறப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீஸôர், அப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் பெயர் பட்டியலைப் பெற்று, பின்னர் அவர்கள் நேரில் பார்த்து விசாரித்து, முகவரிகளை சேகரிக்கின்றனர்.

 இதேபோல புகைப்படமும் வாங்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் பணி இன்னும் நீடித்து வருகிறது. வேலைப்பளுவின் காரணமாக, இப் பணியில் அதிகக் கவனம் செலுத்த முடிவதில்லை என சில காவலர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் சுமார் 90 சதவீதப் பணி நிறைவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இப் பணி நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 குற்றப் பின்னணி மற்றும் சந்தேகத்துக்குரிய நபர்களின் கைரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும் எனவும், அப்போதுதான் குற்றங்களின் ஈடுபடுவோரை உடனே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT