தமிழ்நாடு

சிறைகளில் 10 ஆயிரம் கைதிகளுக்கு ஸ்மார்ட் கார்டு

சென்னை, ஜன. 22: தமிழக சிறைகளில் அமைக்கப்படும் தொலைபேசி மையங்களில் பேசுவதற்கு கைதிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.  சுமார் 10 ஆயிரம் கைதிகளுக்கு இந்த கார்டு வழங்கப்பட உள்ளதாக சிறைத்துறை ஏ.டி.ஜி

கே.வாசுதேவன்

சென்னை, ஜன. 22: தமிழக சிறைகளில் அமைக்கப்படும் தொலைபேசி மையங்களில் பேசுவதற்கு கைதிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது.

 சுமார் 10 ஆயிரம் கைதிகளுக்கு இந்த கார்டு வழங்கப்பட உள்ளதாக சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. எஸ்.கே. டோக்ரா கூறினார்.

 கடந்த சில ஆண்டுகளாக சிறைகளில் சட்டவிரோதமாக கைதிகள், செல்போனை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு சிறைத்துறை கடுமையான நடவடிக்கை எடுத்தபோதும் பயனில்லை. இதையடுத்து கைதிகள் தங்களது குடும்பத்தினரிடம் பேசுவதற்கு வசதியாக தொலைபேசி மையங்களை திறப்பது குறித்து சிறைத்துறை நிர்வாகம் ஆலோசித்து வந்தது.

 இப்போது மாநிலத்தில் உள்ள மத்திய சிறைகள் உள்ளிட்ட முக்கியமான சிறைகளில் நவீன தொலைபேசி மையங்களை எல்காட் உதவியுடன் அமைப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வருகின்றன.

 மொத்தம் ரூ. 1.58 கோடி செலவில் ஏறத்தாழ 54 தொலைபேசி இணைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புழல்-8, வேலூர்-7, கடலூர்-3, திருச்சி-8, சேலம்-5, கோயம்புத்தூர்-8, மதுரை-5, பாளையங்கோட்டை-6 என்ற வீதத்தில் தொலைபேசிகள் அமைக்கப்படுகின்றன. இதேபோல புழல், வேலூர், திருச்சி ஆகிய இடங்களில் உள்ள பெண்கள் சிறைகள், புதுக்கோட்டை சிறுவர் கூர்நோக்கு இல்லம் ஆகியவற்றில் தலா ஒரு தொலைபேசி அமைக்கப்படுகின்றன.

 ஸ்மார்ட் கார்டு: கைதிகள் தொலைபேசி மையத்தில் பணம் செலுத்துவதற்கு பதிலாக அவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட் கார்டுகளில் கைதிகள் பணத்தை செலுத்தி சிறை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சுமார் 10 ஆயிரம் கார்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த கார்டில் கைதிகளின் விவரம், அவர் எத்தனை முறை பயன்படுத்தி உள்ளார், எந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்கிறார் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

 கட்டுப்பாடு:÷இந்த தொலைபேசிகளில் ஒரு கைதி 30 நிமிஷம் மட்டும் பேச அனுமதிக்கப்படுகிறது. அதாவது 10 நாள்களுக்கு ஒரு முறை 10 நிமிஷம் பேச அனுமதி வழங்கப்படுகிறது. கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் பேசுவதற்கே இந்த மையம் அமைக்கப்படுகிறது. இந்த தொலைபேசிகளைப் பயன்படுத்தி கைதிகள் மேலும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க சிறைத்துறை திட்டமிட்டுள்ளது.

 இதற்காக அங்கு கைதிகள் தொடர்பு கொள்ளும் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் தொலைபேசி மையத்தில் கேமராக்கள் பொருத்தப்படும். கைதிகளின் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்படும் என்று சிறைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

 கைதிகள் தங்களது குடும்பத்தினரிடம் பேச சட்டப்படி உரிமை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் தொலைபேசி வசதி சிறையில் ஏற்படுத்தப்படவுள்ளன. இந்த வசதி சில வாரங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும். இதன் பின்னரும் கைதிகள் செல்போனை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. எஸ்.கே. டோக்ரா தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

SCROLL FOR NEXT