முகப்பு
தமிழ்நாடு

திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப்படுமா?

திருத்தணி, ஜூன். 20: திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது. திருத்தணியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நாள்தோறும் 30 ஆய

Updated On : 2 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

திருத்தணி, ஜூன். 20: திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள் திறக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பயணிகளிடையே எழுந்துள்ளது.

திருத்தணியை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து வெளியூருக்கு செல்கின்றனர்.

இங்கிருந்து, சென்னை,திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், திருப்பதி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு அதிகமானவர்கள் சென்று வருகின்றனர். ஆனால், இத்தனை பேர் வந்து செல்லும் திருத்தணி ரயில் நிலையத்தில் மொத்தம் 3 டிக்கெட் கவுன்ட்டர்களே உள்ளன. இதில் இரண்டு டிக்கெட் கவுன்ட்டர்கள் மட்டுமே செயல்படுகின்றன. இந்த கவுன்டர்களில்தான், வெளியூர்களுக்கு செல்ல டிக்கெட்டும், ரயில் பயணிகளின் மாதாந்திர சீசன் டிக்கெட்டும் வழங்கப்படுகின்றன. அதிகாலை 5 முதல் காலை 7.30 வரை மற்றும் மதிய நேரங்களிலும், சென்னை சென்ட்ரல் வரை செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெற ஏராளமானோர் வருகின்றனர்.

ஆனால், இரண்டு கவுன்ட்டர்களே உள்ளதால் பெரும்பாலும் பல பயணிகளுக்கு உரிய நேரத்தில் டிக்கெட் வாங்க முடியாமல் போகிறது.

இதுகுறித்து ரயில் பயணி குமார் என்பவர் கூறியது:

திருத்தணி ரயில் நிலையத்தில் உள்ள 3 டிக்கெட் கவுன்டர்களில் 2 மட்டுமே செயல்படுகின்றன. மூன்றாவது டிக்கெட் கவுன்டர் கடந்த சில ஆண்டுகளாகவே மூடியே உள்ளது. இதனால் அதிகாலையில் சென்னை, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட ஊர்களுக்கு வேலைக்காக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ரயில் டிக்கெட் எடுக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

திருத்தணி ரயில்நிலையத்தில் மொத்தம் 3 நடைமேடைகள் உள்ளன. இதில், பயணிகள் அமர்வதற்க்கு நாற்காலிகள் போதுமானதாக இல்லை. இதனால் ரயில் வரும் வரை பயணிகள் நிற்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார் அவர்.

இந்த பிரச்னைகளை கருத்தில் கொண்டு, திருத்தணி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்களை திறக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.