தமிழ்நாடு

சமூக விரோதிகளின் புகடமாகும் "சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள்'

சென்னை: சென்னையில் இயங்கும் 'சர்வீஸ் அபார்ட்மெண்டகள்', சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.  சகல வசதிகளுடன் அடுக்கக வீட்டை நாள்கள் கணக்கில் வாடகைக்கு விடும் முறைதான் "சர்வீஸ்

கே.வாசுதேவன்

சென்னை: சென்னையில் இயங்கும் 'சர்வீஸ் அபார்ட்மெண்டகள்', சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

 சகல வசதிகளுடன் அடுக்கக வீட்டை நாள்கள் கணக்கில் வாடகைக்கு விடும் முறைதான் "சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள்'. நட்சத்திர ஹோட்டல்களில் கிடைக்கக்கூடிய பல்வேறு வசதிகளும் இங்கு கிடைக்கும்.

 முதலில் மும்பையில் பிரபலமான இந்த சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள், 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு சென்னையிலும் பிரபலமானது. சென்னையில் 100-க்கும் மேற்பட்ட "சர்வீஸ் அபார்ட்மெண்டகள்' உள்ளன.

 நுங்கம்பாக்கம், மாம்பலம், எழும்பூர், தியாகராயநகர், கீழ்ப்பாக்கம், கிழக்கு கடற்கரைச் சாலை, மீனம்பாக்கம், உள்ளகரம், வண்டலூர் என நகருக்குள்ளும், புறநகரிலும் "சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள்' உள்ளன.

 பொதுவாக "சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள்', நட்சத்திர ஹோட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பெரிய மருத்துவமனைகள், பெரிய நிறுவனங்கள் ஆகியவற்றின் அருகே இருக்கின்றன.

 வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வந்து பல நாள்கள் தங்க விரும்புகிறவர்கள், சுற்றுலா வருபவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவரின் உறவினர்கள், தொழில் நிறுவனங்களை ஆய்வு செய்ய வருகிறவர்கள் போன்றோரை மையமாக வைத்தே இவை இயங்குகின்றன.

 வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக இணையதளங்கள் மூலமாகவும், சுற்றுலா நிறுவனங்கள் மூலமாகவும் "சர்வீஸ் அபார்ட்மெண்ட்டை' வாடகைக்கு விடுவோர் விளம்பரங்கள் செய்கின்றனர். சிலர் ஆன்லைனிலே முன்பதிவு செய்யும் வசதியையும், கட்டணம் செலுத்தும் வசதியையும் வைத்திருக்கின்றனர்.

 இவற்றில் ஒரு நாள் தங்குவதற்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

 சமூக விரோதிகளின் கூடாரம்: இந்த நிலையில், இவைகளுக்கு என பிரத்யேக விதிமுறைகள் எதுவும் விதிக்கப்படவில்லை. அதோடு சாதாரணமாக மேன்ஷன்களில் கடைப்பிடிக்கும் விதிமுறைகளைக்கூட இந்த அபார்ட்மெண்ட் நடத்துபவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் வேதனையானது.

 இதனால் சில "சர்வீஸ் அபார்ட்மெண்ட்டுகள்' சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரின் புகலிடமாக மாறி வருகிறது.

 சூதாட்டம், விபசாரம் போன்றவை இங்கு சாதாரணம். இவற்றின் மீது அவ்வப்போது காவல் நிலையங்களுக்குப் புகார்கள் வந்தாலும், விசாரணை செய்வதில் கூட, இடர்பாடு ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 "சர்வீஸ் அபார்ட்மெண்ட்களில்' பதிவேடுகள் கூட பராமரிக்கப்படாததால், அங்கு யார் தங்குகிறார்கள் என்ற விவரங்களை திரட்டுவதில் கூட காவல்துறையினர் திணறி வருகின்றனர். அதேவேளையில் சில சர்வீஸ் அபார்ட்மெண்ட் நிர்வாகங்கள், எவ்வித ஒத்துழைப்பையும் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது.

 இதில் கடந்த காலங்களில் சர்வீஸ் அபார்ட்மெண்ட்களை தங்களது வீடு எனக் கூறி மோசடி சம்பவங்களும் சென்னையில் நடைபெற்றுள்ளன.

 ஏற்கெனவே மேன்ஷன்கள் எந்த விதிமுறைக்கும், சட்டத்துக்கும் உள்படுத்தப்படாமல் இருந்த காலத்தில் பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் கூறப்பட்டன. ஆனால் அப்போது அரசும், காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை. பயங்கரவாதிகளை அங்கிருந்து கைது செய்த பின்னரே மேன்சன்களை காவல்துறை முறைப்படுத்தியது.

 எனவே அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னதாகவே, சர்வீஸ் அபார்ட்மெண்ட் விஷயத்தில் அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேணடும் என்று பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT