தமிழ்நாடு

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைப் பெற வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜீவ. இராம ஸ்ரீநிவாஸன்

பண்ருட்டி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைப் பெற வரும் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பண்ருட்டி நகரில் கும்பகோணம் சாலையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. பண்ருட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைப் பெற்று பலனடைந்து வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 1200-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். 70-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பண்ருட்டி மருத்துவமனையில் தலைமை மருத்துவர் உள்ளிட்ட 20 மருத்துவர்கள் பணியிடம் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 5 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களில் சிலர் விடுமுறையில் சென்று விட்டால் எஞ்சியுள்ள இரண்டு, மூன்று மருத்துவர்கள் மட்டும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

கடந்த 6 மாதங்களாகவே பண்ருட்டி மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் இரு மருத்துவர்கள் மட்டும் இருந்ததால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது.

இது குறித்து மூத்த மருத்துவர் ஒருவர் கூறியது: பண்ருட்டி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் உள்ளிட்ட 19 மருத்துவர்கள் பணியிடம் பட்டியலில் உள்ளது. கடந்த ஒரு ஆண்டுகளாக தலைமை மருத்துவர் பணியிடமும், சில ஆண்டுகளாக 7 மருத்துவர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதில் 6 மருத்துவர்கள் நீண்டகாலமாக பணிக்கே வருவதில்லை. இந்நிலையில் தற்போது உள்ள 5 மருத்துவர்கள் மட்டும் வைத்துக் கொண்டு நாள்தோறும் வரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பணியில் உள்ள மருத்துவர்கள் விடுப்பு எடுக்கும் சமயத்தில் நோயாளிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் மருத்துவர்களுக்கு பணிச் சுமை, மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக அறுவை சிகிச்சை, கண், எலும்பு மருத்துவர்கள் இல்லை. இதனால் விபத்து உள்ளிட்ட சில சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை கடலூர் மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது என கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT