முகப்பு
தமிழ்நாடு

ஜனவரி முதல் அனைத்து மாநகர பஸ்களிலும் ஜி.பி.எஸ். வசதி

மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை 2014 ஜனவரி முதல் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 13 டிசம்பர், 2013 at 3:45 AM
பகிர்:

மாநகர பஸ்களில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்துடன் கூடிய வசதிகளை 2014 ஜனவரி முதல் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டம் இப்போது சோதனை ஓட்டமாக முதலில் 21ஜி வழித் தட பஸ்ஸில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்போது ஏ 21 (தாம்பரம் - திருவான்மியூர்) பஸ்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தப் புதிய திட்டம் நடைமுறைக்கு வரும்போது, மாநகர பஸ்களில் ஏற்படும். விபத்துகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

அண்மைக் காலமாக, மாநகர பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதும், இதனால் தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இதைத் தடுக்க நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள், ஒழுங்கு நடவடிக்கை என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்தபோதும், விபத்து தொடர்கதையாகி வருகிறது.

தலைநகர் தில்லியில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தப்பட்டிருப்பதாக, பிரபல தனியார் பஸ் தயாரிப்பு நிறுவன உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த நிறுவனம்தான் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பஸ்களை தயாரித்து வழங்கி வருகிறது.

மேலும் மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் (ஜே.என்.என்.யு.ஆர்.எம்.) - 2-ன் கீழ் தயாரித்து வழங்கப்படும் அனைத்து பஸ்களும் கேமரா பொருத்தப்பட்டுள்ள பஸ்கள்தான்.

இதன் மூலம் பஸ்களில் பயணிகள் படிக்கெட்டில் தொங்குவது, பிக்-பாக்கெட் உள்ளிட்ட சம்பவங்களை ஜி.பி.எஸ். உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணித்து உடனடியாக பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்த முடியும் என அந்த பஸ் தயாரிப்பு நிறுவன உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந்த நகரங்களுக்கு அடுத்தபடியாக, சென்னையில் இயங்கும் மாநகர பஸ்களிலும் விரைவில் கேமரா வசதி வரப் போகிறது என்ற தகவல் தெரியவந்துள்ளது.

தமிழக அரசு அறிவித்த ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் செயல்பட உள்ள தகவல் மற்றும் பொழுதுபோக்கு திட்டத்தில்தான், மாநகர பஸ்களில் கேமரா பொருத்தும் திட்டமும் இடம்பெற்றுள்ளது.

எனவே, விரைவில் மாநகர பஸ்களில் படிக்கெட்டு பயணத்தை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்கின்றனர் மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள்.

புத்தாண்டு பரிசு... இந்த புதியத் தொழில்நுட்பத்தை 2014 ஜனவரி முதல் மாநகர பஸ்களில் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதல் கட்டமாக 100 ஏ.சி. பஸ்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் 32 இன்ச் எல்.சி.டி. டிவி ஒன்றும், 24 இன்ச் டிவி என இரண்டு டிவிக்கள் பொருத்தப்படும்.

டிரைவர் இருக்கைக்கு பின்புறம் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படும்.

படிப்படியாக 500 பஸ்கள் வீதம் மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் உள்ள 3,640 பஸ்களில் இந்த திட்டம் முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.

என்னென்ன வசதி? இந்த தொழில்நுட்பம், பஸ் நிறுத்தங்களின் பெயரை அந்த நிறுத்தம் வருவதற்கு 150 மீட்டருக்கு முன்பே பஸ்ஸில் ஒலிக்கச் செய்யும். இதனால், மற்றவர்களின் உதவியை நாடாமல், நிறுத்தம் வரப்போவதை முன்கூட்டிய பயணிகள் தெரிந்து கொள்ள முடியும்.

பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள டி.வி.யில் விளம்பரம், சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள், சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், தட்பவெப்ப நிலை குறித்த விவரங்கள் ஆகியவை ஒளிபரப்பப்படும்.

மேலும் அனைத்து பஸ்களிலும் கேமரா பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ். தொழில்நுட்ப உதவியுடன் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி பஸ்ஸின் உள்புறம் கண்காணிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் தேவையான தகவல்களை எஸ்.எம்.எஸ். மூலம் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு உடனடியாக தெரிவிக்க முடியும். இந்த எஸ்.எம்.எஸ். பஸ்ஸில் பொருத்தப்பட்டுள்ள டி.வி.யில் ஒளிபரப்பாகும்.

போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களும் உடனுக்குடன் டிரைவர்களுக்கு தெரிவிக்க முடியும். இதன் மூலம் பஸ்ûஸ மாற்றுப் பாதையில் செலுத்த ஏதுவாக இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.