இளம்பெண் பலாத்காரம்: மூவர் கைது
நாமக்கல் அருகே இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
நாமக்கல் அருகே இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.
நாமக்கல் பெரிய அய்யம்பாளையத்தைச் சேர்ந்த 18 வயது பெண் தனது தாயுடன் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது தாய் வெளியூர் சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த அந்தப் பெண் அருகிலுள்ள கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்றாராம். அப்போது, அவரது குடும்பத்துக்கு ஏற்கெனவே பழக்கமான நல்லிபாளையத்தைச் சேர்ந்த மினி பஸ் ஓட்டுநருமான கிருஷ்ணன் (25), அந்தப் பெண்ணிடம் சாதுரியமாகப் பேசி மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றாராம். பின்னர், தனது நண்பர்களான சேலத்தைச் சேர்ந்த குமார் (32), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவா (25) மற்றும் ஒருவருடன் சேர்ந்து, சேலம் சாலையிலுள்ள பொன்நகர் பகுதியில் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணன், குமார், சிவா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை தேடி வருகின்றனர்.