முகப்பு
தமிழ்நாடு

விசாரணை முடிவில் உண்மை வெளிவரும்: தாராபுரம் தொழிலதிபர் பேட்டி

வருமானவரித் துறை விசாரணை முடிந்த பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை வெளிவரும் என தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் கூறினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

வருமானவரித் துறை விசாரணை முடிந்த பிறகு, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த உண்மை வெளிவரும் என தாராபுரம் தொழிலதிபர் ராமலிங்கம் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ராமலிங்கம். இவரது வீட்டில் வருமானவரித் துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பத்திரங்களின் உண்மை தன்மை குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை வருமானவரித் துறை அலுவலகத்தில் ஆஜராகக் கோரி ராமலிங்கத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து, வருமானவரித் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி, சனிக்கிழமை வீடு திரும்பிய ராமலிங்கம் செய்தியாளர்களிடம் கூறியது:

வருமானவரித் துறையினர் என்னிடம் பல கோணங்களில் கேள்வி எழுப்பினர். அதற்கு உண்மையான பதிலை முழுமையாக அளித்துள்ளேன். வழக்கு விசாரணை முடிந்த பிறகு உண்மை வெளிவரும்.

ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை, பிரேசில் நாட்டைச் சேர்ந்த நண்பர் டெனியலிடம் வாங்கினேன். கடந்த 2005ஆம் ஆண்டு கடும் கடன் பிரச்னையில் இருந்த நான், அறிவைப் பயன்படுத்தி உண்மையாக முன்னேறி உள்ளேன்.

இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் ஜனவரி 11ஆம் தேதி வருமான வரித்துறையினர் முன் ஆஜராக உள்ளேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →