தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்

தினமணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடலோரப் பகுதிகளில் ஏற்பட்ட பலத்த கடல் சீற்றத்தினால் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன.

சனிக்கிழமை இரவு முதல் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது.

கடல் அலைகளின் சீற்றம் அதிகமாகக் காணப்படுகிறது. இரயுமன்துறை, வள்ளவிளை, நீரோடி, மார்த்தாண்டம் துறை, இரவிபுத்தன்துறை, தூத்தூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

பூத்துறை பகுதியில் ராட்சத அலைகள் எழும்பின. கடல் அரிப்பு தடுப்புச் சுவர்களைத் தாண்டி அலைகளின் சீற்றம் காணப்பட்டது. இதனால் தடுப்புச் சுவர்கள் சேதமடைந்தன.

மேலும் கடற்கரையையொட்டி உள்ள வீடுகளில் கடல் நீர் புகுந்தது. இதில் சுமார் 100 வீடுகள் பாதிக்கப்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT