முகப்பு
தமிழ்நாடு

விவசாயத்தைக் கைவிட்ட 8.67 லட்சம் தமிழக விவசாயிகள்: புள்ளி விவரம் தரும் அதிர்ச்சித் தகவல்

2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் மட்டும் 8 லட்சத்து 67 ஆயிரத்து 582 தமிழக விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.

தமிழ்நாடு

விவசாயத்தைக் கைவிட்ட 8.67 லட்சம் தமிழக விவசாயிகள்: புள்ளி விவரம் தரும் அதிர்ச்சித் தகவல்

2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் மட்டும் 8 லட்சத்து 67 ஆயிரத்து 582 தமிழக விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 12:00 PM
பகிர்:

2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பத்தாண்டு காலத்தில் மட்டும் 8 லட்சத்து 67 ஆயிரத்து 582 தமிழக விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டுள்ளனர்.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் இந்த அதிர்ச்சிகரமான புள்ளி விவரம் தெரிய வந்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 51 லட்சத்து 16 ஆயிரத்து 39 விவசாயிகள் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 2011-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் தமிழக விவசாயிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 48 ஆயிரத்து 457 ஆகக் குறைந்துள்ளது. மாறாக விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2001-ஆம் ஆண்டில் 86 லட்சத்து 37 ஆயிரத்து 630 ஆக இருந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 96 லட்சத்து 6 ஆயிரத்து 547 என அதிகரித்துள்ளது. அதாவது பத்தாண்டுகளில் புதிதாக 9 லட்சத்து 68 ஆயிரத்து 917 விவசாயக் கூலிகள் உருவாகியுள்ளனர்.

நகரமயமான கிராமங்கள்: இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த கிராமங்களில் 338 கிராமங்கள் மறைந்து நகரங்களாக மாறியதும், மாறாக தமிழ்நாட்டின் நகரப் பகுதிகள் 832-ல் இருந்து 1,097 ஆக அதிகரித்துள்ளதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.

விவசாயம் என்பது நஷ்டம் தரக் கூடிய தொழிலாக நீடிப்பது. விவசாய விளைபொருள்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது. நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் போன்றவற்றால் விவசாய சாகுபடி பரப்பு குறைந்து வருவது என பல காரணங்களால், விவசாயத் தொழிலை கைவிடும் விவசாயிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இது குறித்து பெண்கள் இணைப்புக் குழு என்ற அமைப்பின் மாநிலத் தலைவியும், சமூக ஆர்வலருமான ஷீலு கூறியது:

இந்தியா ஒரு விவசாய நாடு என்கிறோம். ஆனால் விவசாயத் தொழிலைக் காப்பாற்றுவதற்கான கொள்கை இந்திய அரசிடம் இல்லை. தேவையின்றி ஏராளமான மக்கள் விவசாயத் தொழிலை சார்ந்துள்ளதாகவும், தற்போது விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள மொத்த மக்கள் சக்தியில் 75 சதவீதத்தை மாற்றுத் தொழில்களை நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் உள்ளதாகவும் நமது பிரதமரே அடிக்கடி வலியுறுத்தி வருகிறார்.

இதற்கேற்பவே மத்திய அரசின் கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் போன்றவற்றுக்காக லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்களை அரசே ஆர்ஜிதம் செய்து, தொழில் நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் ஊக்குவிக்கப்பட்டு, விளை நிலங்களில் பெரும்பகுதி மனைகளாக மாற்றப்படுகின்றன.

சாகுபடிக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காதது போன்ற இயற்கை இடர்பாடுகளைத் தவிர அரசின் இதுபோன்ற கொள்கைகள் காரணமாகவும் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே வருவதால், விவசாயத்தையே கைவிட வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்படுகின்றனர். இது எதிர்காலத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் ஷீலு.

காவிரி டெல்டா பாசனப் பகுதி விவசாயிகள் நலச் சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி எஸ்.ரங்கநாதன் கூறும்போது, விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே கொண்டு தங்கள் சொந்தக் காலில் விவசாயிகள் நிற்கும் நிலை தற்போது இல்லை. மற்றவர்களைப் போல விவசாயிகளும் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்பட்டால், விவசாயத் தொழிலின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →