தமிழ்நாடு

அதிமுக மாணவர் அணி, இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர்கள் நியமனம்

அதிமுக மணவர் அணி மற்றும் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை அமைப்புகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி

அதிமுக மணவர் அணி மற்றும் இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை அமைப்புகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை செயலாளர் பொறுப்பில், திருச்சி மாநகர் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலாளரும், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான பி.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மாணவர் அணிச் செயலாளராக தென் சென்னை வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளரும், பூங்கா நகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவருமான எஸ்.ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

புதிய பொறுப்புகள் ஏன்? அதிமுகவின் இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்த வைகைச் செல்வன், கட்சி மற்றும் அமைச்சர் பொறுப்புகளில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார். இந்த நிலையில், அந்தப் பொறுப்புக்கு திருச்சி எம்.பி., பி.குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக மாணவர் அணிச் செயலாளராக சரவணப் பெருமாள் இருந்தார். மாநிலங்களவைத் தேர்தலின் போது அவர் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் அவருக்குப் பதிலாக வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். மேலும், சரவணப் பெருமாள் கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்தப் பொறுப்புக்கு எஸ்.ஆர்.விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெட்கப்பட்டதே உன் சிரிப்பு... ரேஷ்மா

நாளை(டிச. 9) எஸ்ஐஆர் விவாதத்திற்கு முன்பு பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டம்!

புதிய அரசு மீன் விதைப் பண்ணை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

புறப்படத் தயாராக இருந்த Indigo விமானத்திற்குள் பறந்த புறா! வைரலாகும் காணொலி!

கவலைகள் மறந்திரு....ராஷி சிங்

SCROLL FOR NEXT