கடலூரில் 2 வீடுகளை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை
கடலூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார்
கடலூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மஞ்சக்குப்பம் சேகர் நகரை சேர்ந்தவர் பெருமாள் (46). நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோவிலிருந்த ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதே போன்று கடலூர் வள்ளியம்மை நகரில் வசிப்பவர் ஞானசேகரன். இவர் ஒய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலராவார். இவரது மனைவி பெளாம்பாள் செவிலியர் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இருவரும் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து பின்புறக்கதவை திறந்து சென்றுள்ளனர். கடலூரில் அடுத்தடுத்து இரு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.