முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சிறப்புவழிபாடு மற்றும் பொதுவிருந்து

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லையம்மனுக்கும், தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் பங்கேற்ற ஜமபந்த (பொதுவிருந்து) நடைபெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் ஸ்ரீதில்லைக்காளியம்மன் கோயிலில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லையம்மனுக்கும், தில்லைக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. பின்னர் பொதுமக்கள் பங்கேற்ற ஜமபந்த (பொதுவிருந்து) நடைபெற்றது. பொதுவிருந்தினை சிதம்பரம் உதவிஆட்சி்யர் எம்.அரவிந்த் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், நகரமன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், பால் வளத் தலைவர் சி.கே.சுரேஷ்பாபு, கோயில் செயல் அலுவலர் க.முருகன், அலுவலர்கள் வாசு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.