முகப்பு
தமிழ்நாடு

மலைக்கோயிலில் புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்

பழனி மலைக்கோயிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியின் திருமேனி நவபாஷாணங்களால் அமையப்பெற்றதாகும். இதை பிரதிஷ்டை செய்த போகர் சித்தர் பெருமானுக்கு சன்னதியின்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

பழனி மலைக்கோயில் போகர் சன்னதியில் அருள்மிகு புவனேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழனி மலைக்கோயிலில் மூலவர் தண்டாயுதபாணி சுவாமியின் திருமேனி நவபாஷாணங்களால் அமையப்பெற்றதாகும். இதை பிரதிஷ்டை செய்த போகர் சித்தர் பெருமானுக்கு சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் தனி சந்நிதி உள்ளது.  இங்கு போகர் பெருமான் வழிபட்ட மரகதலிங்கம், இஷ்டதெய்வமான அருள்மிகு புவனேஸ்வரி அம்பாள், நவதுர்க்கை, தண்டாயுதபாணி, சுப்ரமண்யா மற்றும் சக்கரங்கள் உள்ளது.  வருடம் தோறும் ஆடிமாதம் கடைசி வெள்ளிக்கிழமை அருள்மிகு புவனேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.  அதன்படி வெள்ளிக்கிழமை உச்சிக்காலத்தின் போது அம்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மாப்பொடி, மஞ்சள்தூள், வில்வஇலைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து மாதுளை, மா உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு நகைகளால் சிறப்பு அலங்காரமும், மஹாதீபாராதனையும் நடைபெற்றது.  பூஜைகளை ஜம்பு என்ற சண்முகானந்தம் தலைமையில் பாலசுப்ரமணியம், வசீகரன், கந்தபிரகாஷ் உள்ளிட்டோர் செய்தனர். 

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மங்கல பிரசாதங்களை பெற்று சென்றனர்.   விழாவில் அடிவாரம் புலிப்பாணி ஆசிரமத்தை சேர்ந்த பாலாஜி, முருகானந்தம், பிரபு, நாகராஜ், கோபி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.