முகப்பு
தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் கைது

  கொடைக்கானல் அப்சர்வேட்டரி செம்மணமேடு பகுதியை சேர்ந்தவர் குமார்(42).  இவரது மகள் ராஜாத்திபிரியா(22). ராஜாத்தி பிரியா பெற்றோர் ஒப்புதலுடன் பழனியை அடுத்த

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:36 AM
பகிர்:

பழனி அருகே மனைவியை வரதட்சணை கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.

     கொடைக்கானல் அப்சர்வேட்டரி செம்மணமேடு பகுதியை சேர்ந்தவர் குமார்(42).  இவரது மகள் ராஜாத்திபிரியா(22). ராஜாத்தி பிரியா பெற்றோர் ஒப்புதலுடன் பழனியை அடுத்த ஆத்துக்குமாரபாளையம் மேற்கு வினாயகர் கோயிலை சேர்ந்த ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி திருமணமான நிலையில் இவர்களுக்கு தற்போது சஞ்சனாஶ்ரீ(2) என்ற குழந்தை உள்ளது.  ராஜாத்தி பிரியா தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார்.  ராஜா கொத்தனார் வேலை செய்து வருகிறார். 

ராஜா தினமும் மது அருந்தி விட்டு வந்து ராஜாத்தியை கொடுமை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில் வரதட்சணை பணம் கேட்டு கொடுமை செய்த ராஜா பணம் தராவிட்டால் வேறுபெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜாத்திபிரியா இதுகுறித்த தகவலை பெற்றோருக்கு தகவல் சொல்லி விட்டு திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதைத் தொடர்ந்து அவரது தந்தை ராஜா சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கொடுத்த புகாரைத் தொடர்ந்து டிஎஸ்பி., கோட்டாட்சியர் விசாரணைக்கு வழக்கு உட்படுத்தப்பட்டு ராஜா கைது செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.