தமிழ்நாடு

விருதுநகரில் சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஹபிப் அப்துல்லா முன்னிலை

எஸ். பாண்டியன்

விருதுநகரில் பல்வேறு கோரி்ககைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் புதன்கிழமை மாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். இச்சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஹபிப் அப்துல்லா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் லெட்சுமிநாராயணன், ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்கள்.

இதில், சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அரசு அறிவிக்க வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருனை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு விடுவதை கைவிட்டு அரசே இப்பணியாளர்கள் மூலம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் பல்வேறு ஊழியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் சாலைப்பணியாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இச்சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பச்சைமால்கண்ணன் நிறைவாக நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT