தமிழ்நாடு

புதுதில்லியில் 65-வது குடியரசு தினவிழா பேரணியில்  செந்திக்குமார நாடார் மாணவர் பங்கேற்பு

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இயக்குநரகத்திற்காக குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்பதற்கு என்.சி.சி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல் நிகழாண்டில் விருதுநகர் கல்வி

எஸ். பாண்டியன்

புதுதில்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெற இருக்கிற குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்பதற்காக விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியின் என்.சி.சி. மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு இயக்குநரகத்திற்காக குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்பதற்கு என்.சி.சி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். அதேபோல் நிகழாண்டில் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் இருந்து புதுதில்லியில் நடைபெற இருக்கிற குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக 2 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், செந்திக்குமார நாடார் கல்லூரியின் மாணவர் மா.அருண்ராஜாவும் ஒருவராவர். இந்தச் சாதனைக்காக மாணவர் விருதுநகர், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில், காஞ்சிபுரம், சென்னை உள்ளி்ட்ட பல்வேறு இடங்களில் நடந்த 12 முறை நடந்த 10 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளார். இம்முகாமில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழக தேர்வு எழுதும் வாய்ப்பினையும் விடுத்து, கடுமையான பயிற்சியினால் 65-வது குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் விருதுநகருக்கும், தான் படித்த கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இந்நிலையில் குடியரசு தினவிழா பேரணியில் பங்கேற்கவுள்ள மாணவர் அருண்ராஜாவை 28-வது பேரணி கமாண்டிங் அதிகாரி எஸ்.கே.ஷா, கல்லூரியின் தலைவர் ஆர்.ரத்தினசாமி, செயலாளர் ஆர்.மாதவன், துணைத் தலைவர் எம்.டி.குமரன், பொருளாளர் கே.திரவியராஜன், முதல்வர் சுந்தரபாண்டியன் மற்றும் என்.சி.சி மாணவர் படை அதிகாரி அழகுமணிகுமரன் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 668 கோரிக்கை மனுக்கள்

திருப்பத்தூா் மாவட்டத்தில் 9,11,599 வாக்காளா்கள்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31.57 லட்சம் வாக்காளா்கள்

2,007 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா - முதல்வா் வழங்கினாா்

பத்ம விருதுக்கு தோ்வானவா்களுக்கு பாராட்டு

SCROLL FOR NEXT