சிதம்பரம் வந்த பிரம்மகுமாரிகள் இயக்க விழிப்புணர்வு பேரணிக்கு வரவேற்பு
சென்னையிலிருந்து கன்னியாக்குமரி செல்லும் ஒருங்கிணைப்பாளர் பி.கே.பியூஸ் தலைமையிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இயற்கை, சுற்றுப்புறச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு
சென்னையிலிருந்து கன்னியாக்குமரி செல்லும் ஒருங்கிணைப்பாளர் பி.கே.பியூஸ் தலைமையிலான பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இயற்கை, சுற்றுப்புறச்சூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது.
விழிப்புணர்வு பேரணிக்கு சிதம்பரம் கிளை பிரம்மாகுமாரிகள் அமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரம்மாகுமாரிகள் இயக்க சிதம்பரம் கிளை பொறுப்பாளர் சீதா மற்றும் அருணாதேவி, ஏவிசி கல்லூரி முதல்வர் முனைவர் லோகநாதன், அரிமா கே.சேதுமாதவன் உள்ளிட்டோர் பங்கேற்று வரவேற்றனர். பின்னர் விழிப்புணர்வு பேரணியினர் சிதம்பரம் நகரில் காவல்துறையினர், தீயணைப்பு மீட்புத்துறையினர், அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா மையம், யூத்ரெட் கிராஸ் மாணவர்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர்.
அப்போது புதுதில்லியைச் சேர்ந்த பேரணி ஒருங்கிணைப்பாளர் பி.கே.பியூஸ் தெரிவித்தது: மனிதன் இயற்கையின் 5 தத்துவங்களளாலான தனது உடலை சரியாக, கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இயற்கையும் தன வசகமாக, மனித குலத்தோடு நல்லிணக்கமாக இருக்கும். அதே நேரத்தில் திடீரென ஏற்படும் இயற்கை சீற்றம், பேரிடர்களையும் சமாளிக்கும் திறன், அதற்கான மனநிலையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்காக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் ஒரு அங்கமான ராஜயோகா கல்வி மற்ற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் பிரிவு சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்படுகிறது என பி.கே.பியூஸ் தெரிவித்தார்.