தமிழ்நாடு

ஓடும் பேருந்தில் திடீர் மாரடைப்பு: முன்னாள் ராணுவ வீரர் சாவு

ஓடும் பேருந்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் முன்னாள் ராணுவ வீரர் புதன்கிழமை இறந்தார்.

ஜெபலின்ஜான்

ஓடும் பேருந்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் முன்னாள் ராணுவ வீரர் புதன்கிழமை இறந்தார்.

 ஈரோடு அருகே சித்தோடு எல்லீஸ்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (55). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

 புதன்கிழமை காலை தனது சொந்த வேலை காரணமாக மனோகரன், தனது மனைவியுடன் ஈரோட்டுக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்தபோது மனோகரனுக்கு திடீரென வலிப்பு வந்தது.

 இதனால் பேருந்தில் இருந்த சக பயணிகள், நடத்துநருக்கு தகவல் கொடுத்தனர். அதற்கு அந்த பேருந்து, ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வந்துவிட்டது. அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அவரை ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் சக பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் சேர்த்தனர்.

 அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெவே மனோகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட அவரது மனைவி உமா அழுதுகொண்டே மயங்கிவிழுந்தார். அவரை சக பயணிகள் தேற்றினர். இதனால், அரசுத் தலைமை மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT