ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரை இலங்கை மன்னார்
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 37 பேரை இலங்கை மன்னார் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவுயிட்டது.
ராமேசுவரம் பகுதியிலிருந்து கடந்த ஜீன் 28 ,மற்றும் ஜீலை 6 ஆம் தேதி காலையில் 7 படகில் மீன்பிடிக்க சென்ற 37 மீனவர்களை கச்சத்தீவு கடல் பகுதியில் வைத்து ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை மன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அங்கு போலீஸார் விசாரணை செய்த பின்னர் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக வழக்கு பதிந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி ஜீன் 28 ஆம் சிறைபிடிக்கப்பட்ட 17 மீனவர்களுக்கு ஜீலை 11 ஆம் தேதி வரையும்,ஜீலை 6 ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்களுக்கு ஜீலை 21 ஆம் தேதி வரையிலும் சிறைக்காவலில் வைக்க உத்தரவுயிட்டார்.அதன் பேரில் போலீஸôர் 37 மீனவர்களையும் அனுராதபுரம் சிறையில் அடைத்தனர்.
Advertisement
இந்நிலையில் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய அரசு வலியுறுத்தி வந்ததையொட்டி இலங்கை அதிபர் ராஜபட்சே பரிந்துறையின்பேரில் சிறையிலிருந்த 37 மீனவர்களையும் விடுதலை செய்து மன்னார் நீதிமன்ற நீதிபதி ஆனந்திகனகரெத்தினம் உத்தரவுயிட்டார்.அதன் பேரில் சிறையிலிருந்த 37 மீனவர்களையும் போலீஸôர் அழைத்து வந்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.மேலும் விடுதலையான மீனவர்கள் ஒரு சில நாட்களில் ராமேசுவரம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.