முகப்பு
தமிழ்நாடு

காதலர்கள் வந்த மோட்டார்சைக்கிள் விபத்து

பழனி அருகே காதலர்கள் வந்த மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:53 AM
பகிர்:

பழனி அருகே காதலர்கள் வந்த மோட்டார்சைக்கிள் விபத்துக்குள்ளானதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

  பழனி கோசலவினாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் திருவாச்சலம் மகன் பாலகணேசன்(19).  இவர் பழனி அருகே பாப்பம்பட்டி மேற்குத் தெருவை சேர்ந்த கன்னியப்பன் மகள் பிருந்தா(18)வை கடந்த இரு வருடமாக காதலித்து வந்துள்ளார்.  பிருந்தா பழனி அருகே சின்னக்கலையமுத்தூரில் மகளிர் கல்லூரியில் பயின்று வருகிறார்.   இந்நிலையில் திங்கள்கிழமை பாலகிருஷ்ணன், பிருந்தாவை மோட்டார்சைக்கிளில் அழைத்துக் கொண்டு திருப்பூர் மாவட்டம் உடுமலையில் திரைப்படம் பார்க்க அழைத்து சென்றுள்ளார். 

படம் முடிந்த பின்னர் உடுமலையில் இருந்து கல்லூரிக்கு இருவரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். கல்லூரி அருகே இருந்த திருப்பத்தில் திரும்பும்போது எதிர்திசையில் வேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

 இதுகுறித்து பாலகணேசன் கொடுத்த புகாரின் பேரில் காரை ஓட்டி வந்த போலம்மாவலசை சேர்ந்த சுப்புராயலு மகன் ரமேஷ்(30) மீது பழனி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.