தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரிக்கை

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜெபலின்ஜான்

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இது குறித்து இச்சங்கத்தின் தலைவர் செ.நல்லசாமி வியாழக்கிழமை விடுத்த அறிக்கை:

 பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக திறக்கப்பட்டுள்ள நீரை ஆலைகள் பயன்பாட்டிற்கு எடுக்கின்றனர். ஆலை பயன்பாட்டிற்கு பிறகு வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக ஆற்றிலேயே வடிக்கப்படுகிறது. இதனால் மாசுபட்ட நீரையே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டியது உள்ளது.

 இந்த விதிமுறை மீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், பாண்டியாறு, புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கீழ்பவானி பாசன பகுதிகளில் காய்ந்து போன தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

 பால் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.30, எருமைப்பாலுக்கு ரூ.40 உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் கர்நாடகாவை போல் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.5  மானியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT