முகப்பு
தமிழ்நாடு

நாகையில் குறுவை சாகுபடிக்கு 3-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்திய விவசாயிகள்

காவிரி நீர் பிரச்னையால் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கக் கூட்டத்தில்

Updated On : 5 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

காவிரி நீர் பிரச்னையால் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி கைவிடப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கக் கூட்டத்தில் குறுவை சாகுபடிக்கு வியாழக்கிழமை நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம், நாகையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு. சேரன் தலைமை வகித்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் வி. தனபாலன் முன்னிலை வகித்தார்.

காவிரி நீர் பாசனம் இல்லாததால் கடந்த 3 ஆண்டுகளாக டெல்டா மாவட்ட குறுவை சாகுபடி பொய்த்திருப்பதை மத்திய, மாநில அரசுகளுக்கு வருத்தத்துடன் உணர்த்தும் வகையில், குறுவை சாகுபடிக்கு 3-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

குறுவை சாகுபடி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி என எழுதப்பட்டிருந்த பதாகையின் முன்பாக விவசாயிகள் மெழுகுவத்தி கொளுத்தி வைத்து, நினைவஞ்சலி பதாகைக்கு மலர் தூவி மெüன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு. சேரன், பொதுச் செயலாளர் வி. தனபாலன் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது :

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியாகி 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது தமிழக விவசாயத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.  மத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை அமைக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து நதி நீர் பிரச்னைகளுக்கும் விரைவான தீர்வு காண வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கைவிடப்பட்டிருப்பதால் சுமார் 10 லட்சம் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர், வேளாண் பிரச்னைகள் குறித்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன்  பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துள்ளது. வேளாண் பிரச்னைகளால், கடந்த ஆண்டு மட்டும் 13 விவசாயிகள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி மதிப்பில் வேளாண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயம் பொய்த்துப் போனதால் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 17-ம்தேதி நாகை புத்தூரிலிருந்து, நாகை பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தப்படும் என அவர்கள் தெரிவித்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →